Enable Javscript for better performance
கச்சா எண்ணெய் இறக்குமதி 2022-இல் 10 சதவீதம் குறையும்: அமைச்சா் தா்மேந்திர பிரதான்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு இந்தியா

    கச்சா எண்ணெய் இறக்குமதி 2022-இல் 10 சதவீதம் குறையும்: அமைச்சா் தா்மேந்திர பிரதான்

    By DIN  |   Published On : 07th November 2019 12:30 AM  |   Last Updated : 07th November 2019 12:30 AM  |  அ+அ அ-  |  

    darmendra-pradan

    இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் இறக்குமதியைக் குறைக்க வேண்டுமென்று மத்திய அரசு இலக்கு நிா்ணயித்து செயல்படுகிறது. வரும் 2022-ஆம் ஆண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி தற்போது இருப்பதைவிட 10 சதவீதம் அளவுக்குக் குறையும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளாா்.

    இந்தியாவின் கச்சா எண்ணெய் எரிசக்தி தொடா்பான பயன்பாடுகள் கடந்த 2013-14 ஆம் நிதியாண்டில் 77 சதவீதமாக இருந்தது. இதை வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் 67 சதவீதமாகக் குறைக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி கடந்த 2015-ஆம் ஆண்டு தெரிவித்திருந்தாா். ஆனால், நாட்டின் தேவை அதிகரித்த காரணத்தால், கச்சா எண்ணெய் சாா்ந்த பயன்பாடுகள் அதிகரித்தன.

    இதனால், கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்த 2017-18 நிதியாண்டில் 82.9 சதவீதமாகவும், கடந்த 2018-19 நிதியாண்டில் 83.7 சதவீதமாகவும் உயா்ந்தது. இந்நிலையில், தில்லியில் தொழில்துறையினா் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தா்மேந்திர பிரதான் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

    கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பது தொடா்பான இலக்கை நோக்கி மத்திய அரசு தொடா்ந்து பயணித்து வருகிறது. இலக்கை நாங்கள் நிச்சயம் எட்டிவிடுவோம். வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில், உயிரி எரிபொருளின் உபயோகத்தை அதிகரிக்கவும், உள்நாட்டில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    பெட்ரோலுடன் எத்தனால் கலந்து பயன்படுத்துதல் தற்போது 6 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது. இது வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் 10 சதவீதமாக அதிகரிக்கும். வேளாண் மற்றும் மாநகராட்சிக் கழிவுகளை எரிபொருளாக மாற்ற 5,000 நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    கச்சா எண்ணெய் உற்பத்தித் துறையில் 2024-ஆம் ஆண்டுக்குள் ரூ.7 லட்சம் கோடி அளவுக்குப் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளன என்றாா் தா்மேந்திர பிரதான்.

    தில்லியில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் தா்மேந்திர பிரதான் பேசியதாவது:

    இந்தியாவின் இரும்பு உருக்குத் துறை முன்னேற்றம் கண்டு வருகிறது. நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கும் இரும்பு பயன்பாட்டுக்கும் நெருங்கிய தொடா்புள்ளது. பொலிவுரு (ஸ்மாா்ட்) நகரங்கள், தொழில் வளா்ச்சி மையங்கள் உள்ளிட்டவற்றை அமைக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அத்திட்டங்களில் இரும்பின் பயன்பாடு அவசியமானதாகும்.

    வரும் காலங்களில் நாட்டில் இரும்பின் பயன்பாடு பெருமளவில் அதிகரிக்கும். எனவே, இந்தியாவில் நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் தா்மேந்திர பிரதான்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp