மகாராஷ்டிரத்திலும் கூவத்தூர் ஃபார்முலா: சிவசேனை எம்எல்ஏ-க்களை விடுதியில் தங்கவைக்க முடிவு!

மகாராஷ்டிரத்தில் அரசு அமைப்பதில் இழுபறி நிலை நீடித்து வரும் நிலையில், சிவசேனை எம்எல்ஏ-க்கள் 56 பேரை தனியார் விடுதியில் தங்கவைக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.
சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே (கோப்புப்படம்)
சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே (கோப்புப்படம்)


மகாராஷ்டிரத்தில் அரசு அமைப்பதில் இழுபறி நிலை நீடித்து வரும் நிலையில், சிவசேனை எம்எல்ஏ-க்கள் 56 பேரை தனியார் விடுதியில் தங்கவைக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலை கூட்டணியாக எதிர்கொண்ட பாஜக மற்றும் சிவசேனை கட்சிகள் முறையே 105 இடங்களிலும், சிவசேனை 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆனால், 'ஆட்சியில் சமபங்கு' மற்றும் 'சுழற்சி முறையில் முதல்வர் பதவி' என்கிற சிவசேனையின் கோரிக்கையை ஏற்க பாஜக மறுத்து வருகிறது. இதனால், அங்கு தேர்தல் முடிவுகள் வெளியாகி 15 நாள்கள் ஆகியும், இன்னும் அரசு அமைக்க முடியாத நிலையே நீடிக்கிறது.

அடுத்த 5 ஆண்டுக்கு பாஜக தரப்பில் இருந்துதான் முதல்வர் என்பதில் பாஜக திட்டவட்டமாக இருக்கிறது. அதேசமயம், பாஜகவுடன் பேச்சுவார்த்தை என்றால் அது முதல்வர் பதவியைக் குறித்து மட்டுமே இருக்கும் என சிவசேனையும் தனது முடிவில் உறுதியாக உள்ளது. இதனால், நாளுக்கு நாள் அங்கு அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.

இதனிடையே, மகாராஷ்டிர சட்டப்பேரவையின் ஆயுள்காலம் வரும் 9-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால், அதற்குள் அங்கு ஒரு முடிவு எட்டப்பட வேண்டிய கட்டாயம் நிலவி வருகிறது. 

இந்நிலையில், சிவசேனை எம்எல்ஏ-க்கள் 56 பேரையும் தனியார் விடுதியில் தங்கவைக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, சிவசேனை கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இல்லத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விடுதியில் தங்கவைக்கவே முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com