என்னது.. சிவனுக்கே மாஸ்க்கா? அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள்!

தீவிர காற்று மாசுபாடு காரணமாக வாரணாசியில் உள்ள தர்கேஷ்வர் மகாதேவ் கோயிலில் உள்ள சிவனுக்கு முகமூடி அணிவிக்கப்பட்டு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
என்னது.. சிவனுக்கே மாஸ்க்கா? அதிர்ச்சியில் உறைந்த பக்தர்கள்!

தீவிர காற்று மாசுபாடு காரணமாக வாரணாசியில் உள்ள தர்கேஷ்வர் மகாதேவ் கோயிலில் உள்ள சிவனுக்கு முகமூடி அணிவிக்கப்பட்டுள்ளப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் சுற்றுச்சூழல் மாசுபாடு மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக மக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லி உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசுபாட்டை குறைக்க அந்தந்த மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. 

இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி நகரம் ஆன்மீகத் தலங்கள் அதிகம் உள்ள பகுதியாகும். இங்குள்ள தர்கேஷ்வர் மகாதேவ் கோவிலில்  பணிபுரியும் அர்ச்சகர்கள் உள்ளிட்ட அனைவருமே காற்று மாசுபாட்டில் இருந்து தங்களை காத்துக்கொள்ள முகமூடி அணிந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, சிவனையும் காற்று மாசுபாட்டில் இருந்து பாதுகாக்க சிவனுக்கு முகமூடி அணிவித்துள்ளனர். 'சிவன் பாதுகாப்பாக இருந்தால் தான் நாமும் பாதுகாப்பாக இருக்க முடியும். அதனாலே சிவனுக்கும் முகமூடி அணிவித்துள்ளோம்' என்று அங்குள்ள அர்ச்சகர்கள் கூறியுள்ளனர். 

அர்ச்சகர்களில் ஒருவர் பேசும்போது, 'வாரணாசி நம்பிக்கைக்குரிய இடம். இங்குள்ள சிலைகளை உயிருள்ள தெய்வங்களாக கருதுகிறோம். அவையும் மகிழ்ச்சியாகவும், வசதியாகவும் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். கோடையில் சிலைகள் குளிர்ச்சியாக இருக்கவும், குளிர்காலத்தில் அவற்றை கம்பளிகளில் மூடி வைக்கவும் செய்கிறோம். அதேபோல், அவற்றை மாசுபாட்டிலிருந்து காப்பாற்ற, முகமூடிகளை அணிவித்துள்ளோம்' என்று கூறினார். 

இதேபோன்று இங்குள்ள பல கோவில்களில் சாய் பாபா, ஆஞ்சநேயர், துர்கா ஆகிய கடவுள்களுக்கும் முகமுடி அணிவிக்கப்பட்டுள்ளது போல புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com