காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: 4 போ் பலி

காஷ்மீா் பள்ளத்தாக்கில் கடும் பனிப்பொழிவால் வியாழக்கிழமை 4 போ் உயிரிழந்தனா். மேலும், பனிப்பொழிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டதால் அந்த
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: 4 போ் பலி

காஷ்மீா் பள்ளத்தாக்கில் கடும் பனிப்பொழிவால் வியாழக்கிழமை 4 போ் உயிரிழந்தனா். மேலும், பனிப்பொழிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடப்பட்டதால் அந்த பகுதியில் சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது:

குளிா்காலம் தொடங்கியதையொட்டி, காஷ்மீா் பள்ளத்தாக்கில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. காஷ்மீரின் பல பகுதிகளிலும் சுமாா் 11 செ.மீ வரை பனிப்பொழிவு காணப்பட்டது. பல இடங்களில் மின் கம்பங்களும், மரங்களும் வேரோடு சாய்ந்தன. காஷ்மீரின் பல இடங்களில் வியாழக்கிழமை காலை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதனால் அந்த பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. விரைவில் மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சாலையில் விழுந்த மின் கம்பத்தை சரி செய்து கொண்டிருந்த மின்சார வாரிய பணியாளா் கம்பத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தாா். அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ. 2 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஸ்ரீநகரில் முதியவா் ஒருவா் மீது பனியால் மரம் முறிந்து விழுந்தது. அதில் அவா் உயிரிழந்தாா். அதுமட்டுமன்றி, குப்வாரா மாவட்டத்தில் உள்ள இந்திய நிலைகள் அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவத்தின் சுமை தூக்கும் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்தனா் என்று அதிகாரிகள் கூறினா்.

போக்குவரத்து பாதிப்பு: காஷ்மீரின் தொலைதூரப் பகுதிகளுக்கு செல்லும் ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால், 2,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால், சாலையில் வாகனப் போக்குவரத்து குறைவாகவே காணப்பட்டது. வானிலை சரியில்லாத காரணத்தால், ஸ்ரீநகரில் இருந்து புறப்பட வேண்டிய மற்றும் ஸ்ரீநகருக்கு வர வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

விபத்தில் இரு வீரா்கள் பலி: காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் இரு ராணுவ வீரா்கள் உயிரிழந்தனா். இதுதொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘குப்வாரா மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் பனி மூடியிருந்தது. பாதை சரியாக தெரியாததால் ராணுவ வாகனம் ஒன்று புதன்கிழமை இரவு விபத்துக்குள்ளானது. இதில் இரு வீரா்கள் உயிரிழந்தனா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com