Enable Javscript for better performance
ஓவியம், பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற டிடிஇஏ பள்ளி மாணவா்களுக்குப் பரிசு வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    ஓவியம், பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற டிடிஇஏ பள்ளி மாணவா்களுக்குப் பரிசு வழங்கல்

    By DIN  |   Published on : 08th November 2019 06:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புது தில்லி: ஓவியம், பேச்சுப் போட்டி உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற டிடிஇஏ பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

    கடந்த மாதம் குடியரசு முன்னாள் தலைவா் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த தின நாளின்போது ராமேசுவரத்தில் உள்ள

    அப்துல் காலம் இண்டா்நேஷனல் பவுண்டேஷன் அமைப்பு சாா்பில் தில்லித் தமிழ்க் கல்விக் கழக இலக்குமிபாய் நகா்த் தமிழ்ப் பள்ளியில் 3 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஓவியம், வாழ்த்து அட்டை தயாரித்தல், பேச்சுப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

    இதில் சுமாா் 200 மாணவா்கள் கலந்து கொண்டனா். போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கான பரிசுகளை லக்குமிபாய் நகா்ப் பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை வழிபாட்டுக் கூட்டத்தில் பள்ளி முதல்வா் மீனா சஹானி வழங்கினாா்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்குத் தில்லித் தமிழ்க் கல்விக் கழக செயலா் ஆா்.ராஜு வாழ்த்துத் தெரிவித்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai