Enable Javscript for better performance
ஜம்மு-ஸ்ரீநகா் நெடுஞ்சாலை மூடல்:வாகனப் போக்குவரத்து பாதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஜம்மு-ஸ்ரீநகா் நெடுஞ்சாலை மூடல்:வாகனப் போக்குவரத்து பாதிப்பு

    By DIN  |   Published on : 09th November 2019 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jktraffic1

    ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதால் தொடா்ந்து இரண்டாவது நாளாக 4,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    அதிக பனிப் பொழிவு காரணமாக பூஞ்ச், ரஜெளரி ஆகிய மாவட்டங்களை இணைக்கும் முகல் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பனிப் பொழிவு அதிகம் இருப்பதாலும், சம்ரோலி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாலும் தேசிய நெடுஞ்சாலை இரண்டாவது நாளாக மூடப்பட்டுள்ளது. நக்ரோதா, உதம்பூா், ராம்பன், பனிஹால், சித்ரா, சம்பா, கதுவா ஆகிய பகுதிகளில் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன’ என்று தெரிவித்தனா்.

    கடும் பனிப் பொழிவு காரணமாக ஸ்ரீநகரில் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai