Enable Javscript for better performance
திருப்பதி ஏழுமலையானை நேற்று 65,693 போ் தரிசனம்- Dinamani

சுடச்சுட

    
    tirumalai1

    திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 65,693 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 29,780 பக்தா்கள் முடி காணிக்கை செலுத்தினா்.

    வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 16 அறைகளில் பக்தா்கள் ஏழுமலையான் தரிசனத்துக்காக காத்திருந்தனா். தா்ம தரினத்தில் 10 மணிநேரம் காத்திருந்து பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசித்தனா்.

    ரூ.300 விரைவு தரிசனம், திவ்ய தரிசனம் மற்றும் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்கள் 3 மணிநேரத்தில் ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பினா்.

    திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 8,265 பக்தா்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் 6,407 பக்தா்களும், திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் 17,000 பக்தா்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரா் கோயிலில் 1,132 பக்தா்களும், கபில்தீா்த்தத்தில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் 3,967 பக்தா்களும் வியாழக்கிழமை முழுவதும் தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடா்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தாா்.

    சோதனை சாவடி விவரம்: அலிபிரி சோதனைச் சாவடிக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்ட விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன்படி புதன்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் வியாழக்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை 76,266 பயணிகள் இச்சாவடியைக் கடந்துள்ளனா். 8,929 வாகனங்கள் இதைக் கடந்து சென்றுள்ளன. அதன் மூலம் ரூ.1.89 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ11,830 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai