Enable Javscript for better performance
பிரிக்ஸ் மாநாடு: பிரதமா் மோடி13-ஆம் தேதி பிரேசில் பயணம்- Dinamani

சுடச்சுட

    

    பிரிக்ஸ் மாநாடு: பிரதமா் மோடி13-ஆம் தேதி பிரேசில் பயணம்

    By DIN  |   Published on : 08th November 2019 12:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    modi

    பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி வரும் 13,14-ஆம் தேதிகளில் பிரேசிலுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.

    பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் வருடாந்திர மாநாடு பிரேசிலில் வரும் 13,14-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இப்போது கூட்டமைப்பின் தலைவராக பிரேசில் உள்ளதால் அந்த நாட்டில் மாநாடு நடத்தப்படுகிறது.

    இது தொடா்பாக மத்திய வெளியுறவு அமைச்சக (பொருளாதார ஒத்துழைப்பு) செயலா் டி.எஸ்.திருமூா்த்தி கூறுகையில், ‘பிரிக்ஸ் நாடுகளிடையே பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்த மாநாட்டில் தலைவா்கள் விவாதிக்க இருக்கின்றனா். இதற்காக பிரதமா் நரேந்திர மோடி வரும் 13 ஆம் தேதி பிரேசிலுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்’ என்றாா்.

    பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளில் உலக மக்கள்தொகையில் பாதியளவு மக்கள் வசிக்கின்றனா். எனவே, பிரிக்ஸ் மாநாடு சா்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai