சோனியா, ராகுல் மற்றும் பிரியங்காவிற்கான எஸ்.பி.ஜி பாதுகாப்பை வாபஸ் பெற்ற மத்திய அரசு!

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி என்னும் சிறப்பு பாதுகாப்பு பிரிவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.
சோனியா காந்தி குடும்பம்
சோனியா காந்தி குடும்பம்

புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி என்னும் சிறப்பு பாதுகாப்பு பிரிவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு எஸ்.பி.ஜி என்னும் சிறப்பு பாதுகாப்பு பிரிவினரின் மூலமாக பாதுகாப்பு  வழங்கப்பட்டு பெறுகிறது. எஸ்.பி.ஜி என்னும் இந்த சிறப்பு பாதுகாப்பு குழு தான் பிரதமருக்கு பாதுகாப்பு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது

சோனியாவின் கணவரும் முன்னாள் பிரதமருமான ராஜிவ் காந்தி மரணத்திற்குப் பின்னர், அவர்கள் குடும்பத்திற்கு உயிர் ஆபத்து இருப்பதாக கருதி இத்தகைய பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி என்னும் சிறப்பு பாதுகாப்பு பிரிவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.

இதுதொடர்பான தகவல்கள் மத்திய அரசு வட்டாரங்களில் வெள்ளியன்று மாலை விரைவாகப் பரவியது. அதேசமயம் சிறப்பு பாதுகாப்பை (எஸ்.பி.ஜி) திரும்பப் பெற்று, அதற்கு பதிலாக சி.ஆர்.பி.எப் வீரர்கள் அடங்கிய 'இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு அவர்களுக்கு அரசு சார்பில்  வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது அவர்கள் உயிருக்கு எந்த விதமான நேரடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று மத்திய உளவுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com