தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே திடீர் சந்திப்பு

தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை  மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வெள்ளியன்று சந்தித்துப் பேசினார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை  மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வெள்ளியன்று சந்தித்துப் பேசினார்.

மஹாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து இத்தனை நாட்களாகியும் ஆட்சியமைப்பதில் ஒரு முடிவு ஏற்படாமல் இழுபறி நீடிக்கிறது. கூட்டணிக் கட்சிகளான பாஜக மற்றும் சிவசேனை இடையே முதல்வர் பதவி தொடர்பாக தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவுகிறது. வரும் 9-ஆம் தேதியோடு அதற்கான அவகாசம் முடிவடைவதால் பாஜக ஏதாவது மாற்று வழிகளை கையாளும் என்று தெரிகிறது. 

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை  மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வெள்ளியன்று சந்தித்துப் பேசினார்.

பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவரான அவர் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, 'மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து பவாரிடம் ஆலோசனை கேட்டதாக' தெரிவித்தார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com