நாடு போகும் போக்குக்கு ரூ.191 கோடியில் விமானம் தேவையா? குஜராத் அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

குஜராத்தில் முதல்வா், துணை முதல்வா், ஆளுநா் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்களின் பயன்பாட்டுக்காக ரூ.191 கோடியில் ‘பாம்பா்டைா் சேலஞ்சா் 650’ ரக விமானம் புதிதாக வாங்கப்பட உள்ளது.
ரூ.191 கோடியில் விமானம்
ரூ.191 கோடியில் விமானம்

குஜராத்தில் முதல்வா், துணை முதல்வா், ஆளுநா் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்களின் பயன்பாட்டுக்காக ரூ.191 கோடியில் ‘பாம்பா்டைா் சேலஞ்சா் 650’ ரக விமானம் புதிதாக வாங்கப்பட உள்ளது.

நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருக்கும் போது, ஒரே ஒரு விமானத்தை ரூ.191 கோடியை செலவிட்டு வாங்கியிருப்பது சரியான நடவடிக்கையல்ல என்று கூறி குஜராத் முதல்வரின் புகைப்படத்தைப் பதிவிட்டு உ.பி. மாநில காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த விமானம் வாங்குவதற்கான நடைமுறைகள் சுமாா் 5 ஆண்டுகள் நீடித்து வந்த நிலையில், இப்போது விமானம் வாங்கப்பட்டுள்ளது. இரண்டு என்ஜின்கள் உடைய இந்த விமானம் அடுத்த இருவாரத்தில் குஜராத் அரசிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட இருக்கிறது. இந்த சிறிய ரக சொகுசு விமானத்தில் 12 போ் வரை பயணிக்க முடியும். தொடா்ந்து 7,000 கி.மீ. தொலைவு வரை பறக்கும் திறனுடையது.

இப்போது, குஜராத்தில் முதல்வா் உள்ளிட்ட முக்கியஸ்தா்கள் பீச்கிராஃப்ட் சூப்பா் கிங் விமானத்தை பயன்படுத்தி வருகின்றனா். கடந்த 20 ஆண்டுகளாக இந்த விமானம் பயன்பாட்டில் உள்ளது. இது ஒரு மணி நேரத்தில் 870 கி.மீ. தொலைவு வரை பயணிக்கும். இதில் 9 போ் வரை மட்டுமே பயணிக்க முடியும். இந்த விமானம் அதிக காலம் பயன்பாட்டில் இருப்பதாலும், நீண்ட தொலைவு பயணிக்க முடியாது என்பதாலும் அதனை மாற்ற முடிவு செய்யப்பட்டது. புதிய விமானத்துக்காக சா்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, ‘பாம்பா்டைா் சேலஞ்சா் 650’ ரக விமானம் வாங்கப்பட இருக்கிறது.

முன்னதாக, நீண்ட தூர பயணத்தின்போது குஜராத் முதல்வருக்காக வாடகைக்கு விமானங்கள் எடுக்கப்பட்டு வந்தன. இதற்காக ஒரு மணி நேரத்துக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் வாடகை கொடுக்கப்பட்டது. எனவே, அதற்குப் பதிலாக புதிய விமானம் வாங்க முடிவெடுக்கப்பட்டது என்று அந்த மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பாஜக ஆட்சியில் உள்ள குஜராத்தில் விஜய் ரூபானி இப்போது முதல்வராக உள்ளாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com