மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறாரா ராகுல் காந்தி? - காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பேட்டி

காங்கிரஸை வழிநடத்த ராகுல் காந்தி மீண்டும் சரியான நேரத்திற்கு வருவார் என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், கட்சியின் செயற்குழு உறுப்பினருமான ஏ.கே. ஆண்டனி தெரிவித்துள்ளார். 
மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகிறாரா ராகுல் காந்தி? - காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பேட்டி

காங்கிரஸை வழிநடத்த ராகுல் காந்தி மீண்டும் சரியான நேரத்திற்கு வருவார் என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சரும், கட்சியின் செயற்குழு உறுப்பினருமான ஏ.கே. ஆண்டனி தெரிவித்துள்ளார். 

திருவனந்தபுரத்தில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய  காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஏ.கே. ஆண்டனி, 'காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்சித் தலைமை பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவர் சென்றுவிட்டார் என்ற வருத்தம் நம்மில் எவருக்கேனும் உள்ளதா? ஆனால், அவர் கண்டிப்பாக திரும்பி வருவார். மீண்டும் காங்கிரஸை வழிநடத்த சரியான நேரத்தில் வருவார்' என்று கூறினார். 

மேலும், ' காங்கிரஸ் தலைவர்களை சிறையில் அடைப்பதன் மூலம் கட்சியை ஒன்றும் செய்ய முடியாது. கட்சியின் முன்னாள் தலைவர்களான நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரை பாஜக அரசு தவறாக விமர்சித்து வருகிறது. இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில், மோடி தலைமையிலான அரசாங்கத்தினைக் கைப்பற்ற, காங்கிரஸ் கட்சி மீண்டும் புத்துயிர் பெற அவர் வருவார்.  பீனிக்ஸ் பறவையைப் போலவே, காங்கிரஸ் கட்சியும் திரும்பி வரும்' என்று பேசியுள்ளார். 

முன்னதாக, காங்கிரஸ்  தலைவராக இருந்த ராகுல் காந்தி, நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார். அதன் தொடர்ச்சியாக, சோனியா காந்தி கட்சியின் இடைக்காலத் தலைவராக செயல்பட்டு வருகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com