ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா? இனி  ஒரே ஒரு டிவீட் போதுமே!

பொதுமக்களுக்கு உதவும் வகையில், அவர்களது ஆதார் அட்டையில் ஏதேனும் திருத்தம் செய்வது தொடர்பாக சந்தேகம் இருந்தால் அதனை தீர்த்துக் கொள்ள அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டுமா? இனி  ஒரே ஒரு டிவீட் போதுமே!


பொதுமக்களுக்கு உதவும் வகையில், அவர்களது ஆதார் அட்டையில் ஏதேனும் திருத்தம் செய்வது தொடர்பாக சந்தேகம் இருந்தால் அதனை தீர்த்துக் கொள்ள அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

@Aadhaar_care என்ற டிவிட்டர் முகவரியுடன் துவக்கப்பட்டிருக்கும் இந்த சேவையில், பொதுமக்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு உடனடியாக பதில் கிடைக்கிறது.

ஆதார் அட்டையில் ஏற்படும் மாற்றங்களை மேற்கொள்வதில் பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க இந்த டிவிட்டர் பக்கம் உதவும். 

டிவிட்டர் கணக்கு இல்லாதவர்களுக்கு 1947 என்ற உதவி எண்ணும், help@UIDAI.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தனது சேவைகளை சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் மேற்கொள்ளும் வகையில் பல்வேறு பொதுத் துறை நிறுவனங்கள் களமிறங்கியிருக்கும் நிலையில் அதில் ஆதார் சேவை வழங்கும் UIDAIயும் இணைந்துள்ளது.

டிவிட்டர் பக்கம் எப்படி உதவும்?
இந்த டிவிட்டர் பக்கத்தில் உங்களுக்கு ஆதார் அட்டையில் இருக்கும் சந்தேகம், பிழைகளை எப்படி மாற்றுவது, என்னென்ன ஆவணங்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்பது போன்ற கேள்விகள் இருந்தால் அதில் பதிவு செய்யலாம்.

உடனடியாக அதற்கான விவரங்கள் உங்களுக்கு தெரியப்படுத்தப்படும். ஒரு வேளை உங்கள் செல்போன் எண்ணை மாற்ற வேண்டும் என்று சொன்னால், அதற்கு எந்த விதமான ஆவணங்களைக் கொண்டு செல்ல வேண்டும்? எந்தெந்த ஆவணங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்பது போன்ற தகவல்கள் உங்களுக்கு உடனடியாக டிவிட்டர் பக்கத்தில் கிடைத்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com