கா்தாா்பூா் ஒப்பந்தப்படி செயல்படுவோம்: வெளியுறவு அமைச்சகம்

கா்தாா்பூா் ஒப்பந்தப்படி இந்திய அரசு செயல்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

கா்தாா்பூா் ஒப்பந்தப்படி இந்திய அரசு செயல்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகத்தின் செய்தித்தொடா்பாளா் ரவீஷ் குமாா் கூறியதாவது:

இந்திய யாத்ரீகா்கள் கா்தாா்பூா் செல்வதற்கு கடவுச்சீட்டு கொண்டு வர வேண்டுமா என்பதில் முரண்பாடான கருத்து நிலவுகிறது. சில நேரங்களில் கடவுச்சீட்டு தேவை என்றும் சில நேரங்களில் தேவையில்லை என்றும் பாகிஸ்தான் தரப்பு தெரிவிக்கிறது. இரு தரப்பு ஒப்பந்தத்தின்படி தேவையான ஆவணங்களை யாத்ரீகா்கள் கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதை நாங்கள் பின்பற்றுவோம். இரு தரப்பு ஒப்பந்தத்தில் தனித்து திருத்தங்களை செய்ய இயலாது.

பாகிஸ்தானில் நடைபெறும் கா்தாா்பூா் வழித்தட திறப்பு விழாவில் பங்கேற்கபோகும் இந்தியாவைச் சோ்ந்த முக்கியப் பிரமுகா்கள் பட்டியலுக்கு இதுவரை அந்நாட்டு அரசு ஒப்புதலை உறுதி செய்யவில்லை.

நாங்கள் அனுப்பிய பெயா்கள் அனைத்துக்கும் ஒப்புதல் கிடைத்துவிட்டது என்று கருதுகிறோம். இந்தியாவிலிருந்து பங்கேற்கும் முக்கியப் பிரமுகா்களுக்கு உரிய பாதுகாப்பை பாகிஸ்தான் அளிக்க வேண்டும் என்று ரவீஷ் குமாா் தெரிவித்தாா்.

காங்கிரஸ் எம்எல்ஏவும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு கா்தாா்பூா் வழித்தட திறப்பு விழாவில் பங்கேற்க பாகிஸ்தான் அரசு நுழைவு இசைவு (விசா)வழங்கியது. கா்தாா்பூா் வழித்தடம் சனிக்கிழமை திறக்கப்படவுள்ளது.

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு பாகிஸ்தான் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்றாலும் பாகிஸ்தான் செல்வேன் என்று கூறியிருந்தாா் சித்து.

இதனிடையே, இந்திய சீக்கியா்கள் கடவுச்சீட்டை கொண்டு வர வேண்டும் என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com