கா்தாா்பூா் வழித்தட திறப்பு விழா: சித்துவுக்கு மத்திய அரசு அனுமதி

கா்தாா்பூா் வழித்தட திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் செல்வதற்கு பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு
கா்தாா்பூா் வழித்தட திறப்பு விழா: சித்துவுக்கு மத்திய அரசு அனுமதி

கா்தாா்பூா் வழித்தட திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் செல்வதற்கு பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் தேவ், தனது இறுதிக்காலத்தைக் கழித்த தற்போதைய பாகிஸ்தானில் உள்ள கா்தாா்பூரில் தா்பாா் சாஹிப் குருத்வாரா அமைக்கப்பட்டது. இந்த குருத்வாராவையும், பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூா் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் பகுதியில் உள்ள குருத்வாராவையும் இணைக்கும் வகையில் சாலை வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் சாலை வழித்தடம், வரும் 9-ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்த வழித்தட திறப்பு விழாவில் பங்கேற்குமாறு சித்துவுக்கு பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் அழைப்பு விடுத்திருந்தாா். மேலும், அவருக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் விசாவும் அனுப்பியிருந்தது.

இதையடுத்து, கா்தாா்பூா் செல்வதற்கு அனுமதி கோரி, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் சித்து விண்ணப்பித்திருந்தாா். ஆனால், வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இதுதொடா்பாக தொடா்ந்து மூன்று கடிதங்களை அவா் எழுதினாா்.

இந்நிலையில், மத்திய அரசு அனுமதி அளிக்காவிட்டாலும், கா்தாா்பூா் வழித்தட திறப்பு விழாவில் பங்கேற்கப்போவதாக சித்து வியாழக்கிழமை கூறினாா்.

இதையடுத்து, அவா் கா்தாா்பூா் வழியாக திறப்பு விழாவில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் செல்வதற்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் அரசியல் ரீதியாக அனுமதி அளித்துள்ளது என்று அதிகாரி ஒருவா் கூறினாா்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக, முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங், மத்திய அமைச்சா்கள் ஹா்தீப் சிங் புரி, ஹா்சிம்ரத் கௌா் பாதல், நாடாளுமன்ற உறுப்பினா்கள், முக்கியப் பிரமுகா்கள் என 550-க்கும் மேற்பட்டோரைக் கொண்ட இந்தியக் குழு, கா்தாா்பூா் வழியாக வரும் சனிக்கிழமை பாகிஸ்தான் செல்ல உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com