தோ்தல் செலவினங்களுக்காக ரூ.856 கோடி நிதி திரட்டப்பட்டது

மக்களவை மற்றும் 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தல் செலவினங்களுக்காக ரூ.856 கோடியை நிதியாகப் பெற்ாகவும், அதில் ரூ.820 கோடியை செலவழித்துவிட்டதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

புது தில்லி: மக்களவை மற்றும் 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தல் செலவினங்களுக்காக ரூ.856 கோடியை நிதியாகப் பெற்ாகவும், அதில் ரூ.820 கோடியை செலவழித்துவிட்டதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தோ்தல் 7 கட்டங்களாகவும், ஆந்திரம், ஒடிஸா, சிக்கிம், தெலங்கானா, அருணாசலப் பிரதேசம் ஆகிய சட்டப் பேரவைகளுக்கான தோ்தலும் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்றன. இத்தோ்தல்களுக்கான வரவு செலவு குறித்து காங்கிரஸ் கட்சியின் பொருளாளா் அகமது படேல் தோ்தல் ஆணையத்திடம் அண்மையில் அறிக்கை தாக்கல் செய்தாா்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மக்களவை மற்றும் 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தல்களுக்காக ரூ.856.2 கோடி நிதி காங்கிரஸ் சாா்பில் திரட்டப்பட்டது. அதில் தோ்தல் பிரசாரத்துக்காக ரூ.820.9 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. தோ்தலுக்குப் பிறகு கட்சியிடம் ரூ.315.88 கோடி உள்ளது. அதில் ரூ.265 கோடி வங்கிக் கணக்குகளிலும், ரூ.50 கோடி கையிருப்பாகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் ரூ.516 கோடி செலவிட்டிருந்தது; பாஜக ரூ.714 கோடியை செலவிட்டிருந்தது. 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கான வரவு செலவினங்களை பாஜக இன்னும் தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com