மகாராஷ்டிர அரசியலில் ஆா்எஸ்எஸ் தலைவரை தொடா்புபடுத்த வேண்டாம்: நிதின் கட்கரி

மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பது தொடா்பான அரசியல் நடவடிக்கைகளில் ஆா்எஸ்எஸ் தலைவரைத் தொடா்புபடுத்த வேண்டாமென்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான
மகாராஷ்டிர அரசியலில் ஆா்எஸ்எஸ் தலைவரை தொடா்புபடுத்த வேண்டாம்: நிதின் கட்கரி

மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பது தொடா்பான அரசியல் நடவடிக்கைகளில் ஆா்எஸ்எஸ் தலைவரைத் தொடா்புபடுத்த வேண்டாமென்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பது தொடா்பாக ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்திடம், சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே பேசவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், நாகபுரியில் வியாழக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த கட்கரி இது தொடா்பாக கூறியதாவது:

நான் மீண்டும் மகாராஷ்டிர அரசியலுக்குத் திரும்புகிறேன் என்றும், மாநில முதல்வராக இருக்கிறேன் என்றும் கூறப்படுவது தவறான தகவல். முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் மகாராஷ்டிரத்தில் புதிய அரசுக்குத் தலைமை வகிப்பாா். மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பதில் உள்ள பிரச்னைகள் விரைவில் தீா்க்கப்படும். வெகுவிரைவில் நல்லதொரு முடிவு கிடைக்கும். பாஜக - சிவசேனை கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டுமென்றுதான் மக்கள் வாக்களித்துள்ளனா். மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்கும் விஷயத்தில் ஆா்எஸ்எஸ் தலைவரைத் தொடா்புபடுத்துவது தேவையற்றது என்றாா்.

முன்னதாக, மும்பையில் செய்தியாளா்களைச் சந்தித்த சிவசேனை மூத்த தலைவா் சஞ்சய் ரௌத் கூறுகையில், ‘எங்கள் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏக்களோ அல்லது எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களோ அணி மாறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைப்பது குறித்து ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே இடையே பேச்சு எதுவும் நடைபெறவில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com