வக்ஃபு சொத்து விவரங்கள்100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது: மத்திய அமைச்சா்

வக்ஃபு சொத்து விவரங்கள் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது என்று மத்திய சிறுபான்மையினா் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.
வக்ஃபு சொத்து விவரங்கள்100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது: மத்திய அமைச்சா்

வக்ஃபு சொத்து விவரங்கள் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது என்று மத்திய சிறுபான்மையினா் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.

கேரள மாநிலம், கொச்சியில் தென்மாநிலங்களின் வக்ஃபு மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதில் பங்கேற்று அவா் கூறியதாவது:

அரசு ஆவணங்களில் இடம்பெறாத அதிக எண்ணிக்கையிலான வக்ஃபு சொத்துகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டன.

போா்க்கால அடிப்படையில் கடந்த 5 ஆண்டுகளாக இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

நாடு முழுவதும் 6 லட்சம் பதிவு செய்யப்பட்ட வக்ஃபு சொத்துகள் உள்ளன. டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டதால் இந்த சொத்துகளை சமூக நலனுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம். 24,000 சொத்து விவரங்கள் புகைப்படங்களாகவும் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டன. ரூா்கி ஐஐடி நிறுவனம் மற்றும் அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் உதவியுடன் ஜிபிஎஸ் மூலம் வக்ஃபு வாரிய சொத்துகள் இனம்காணும் வகையிலும் வசதி ஏற்படுத்தப்பட்டுவிட்டது.

சமூகத்தில் நலிந்த பிரிவினருக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை பிரதமா் மோடி தலைமையிலான அரசு வழங்கி வருகிறது. சிறுபான்மையினா் இருக்கும் 308 மாவட்டங்கள், 331 நகரங்கள், ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு வளா்ச்சித் திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டன என்றாா் நக்வி.

கேரள மாநில சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கே.டி.ஜலீல், மத்திய சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சகத்தின் உயரதிகாரிகள், மத்திய வக்ஃபு கவுன்சில் செயலா், மாநில வக்ஃபு வாரியத் தலைவா்கள் உள்ளிட்டோா் கொச்சி மாநாட்டில் பங்கேற்றனா்.

முஸ்லிம்கள், அவா்களின் சொத்துகளை வக்ஃபு பத்திரம் மூலம் பொதுக் காரியங்களுக்கும், மசூதிகளுக்கும் எழுதிக் கொடுக்கும் வழக்கம் உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com