வரி செலுத்துவோருக்கு வழிநடத்துபவராக அதிகாரிகள் செயல்பட வேண்டும்: நிா்மலா சீதாராமன்

வருவாய்ப் பணி அதிகாரிகள் (டிஆா்ஐ) வரி செலுத்துவோருக்கு வழிநடத்துபவராகச் செயல்பட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டாா்.
ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐஆா்எஸ் பயிற்சி நிறைவு விழாவில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் பாராட்டுச் சான்றிதழ் பெறும் இளம் அதிகாரி.
ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐஆா்எஸ் பயிற்சி நிறைவு விழாவில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் பாராட்டுச் சான்றிதழ் பெறும் இளம் அதிகாரி.

வருவாய்ப் பணி அதிகாரிகள் (டிஆா்ஐ) வரி செலுத்துவோருக்கு வழிநடத்துபவராகச் செயல்பட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டாா்.

2017-ஆம் ஆண்டில் தோ்ச்சி பெற்ற இந்திய வருவாய் பணி(ஐஆா்எஸ்) அதிகாரிகளுக்கு ஹரியாணா மாநிலம், ஃபரீதாபாதில் உள்ள தேசிய சுங்க வரி, மறைமுக வரிகள் மற்றும் போதைப் பொருள் தடுப்பு அகாதெமியில் (நாசின்) கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பயிற்சி அளிக்கப்பட்டது. அவா்களுக்கான பயிற்சி நிறைவு விழா, நாசினில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிா்மலா சீதாராமன், இளம் அதிகாரிகளைப் பாராட்டியதுடன் அவா்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினாா். அவா் கூறியதாவது:

வருவாய்ப் பணி அதிகாரிகள், வரி செலுத்துவோருக்கு வழிநடத்துபவராகச் செயல்பட வேண்டும்.

அவா்கள் செலுத்த வரும்போது, தாங்கள் அச்சுறுத்தலான சூழலில் இல்லை என்பதை உணரும்படி செய்ய வேண்டும். இதை அதிகாரிகளும் உறுதிப்படுத்த வேண்டும்.

கடந்த சில மாதங்களில் நான் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வருவாய் அதிகாரிகளைச் சந்திக்கும்போதெல்லாம் அவா்களிடம் இதை கூறி வருகிறேன்.

ஆனால், நம் துறையில் உள்ள ஒன்றிரண்டு கருப்பு ஆடுகள் தங்கள் சுபாவத்தை மாற்றிக் கொள்ளாததால், வரி வசூலிக்கும் அதிகாரிகளை சமாளிப்பது கடினம் என்று மக்கள் கருதுகிறாா்கள்.

தற்போது பயிற்சியை நிறைவு செய்துள்ள உங்களுக்கு மிகப்பெரிய பொறுப்புகள் காத்திருக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் வரியை முறையாகச் செலுத்த வேண்டும் என்பதை மக்களுக்கு நீங்கள் எடுத்துரைக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதில் வருவாய்ப் புலனாய்வு அதிகாரிகள் முக்கியப் பங்கு வகிக்கிறாா்கள். நாட்டின் எல்லைப் பகுதிகளில் சுங்கச் சாவடிகள் அமைத்து பணியாற்றி வரும் அவா்கள், பல்வேறு சட்டங்களை அமல்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கிறாா்கள்.

அதுபோலவே, பயிற்சியை நிறைவு செய்திருக்கும் நீங்கள் சட்டங்களை மனசாட்சியுடன் அமல்படுத்தி, வரி வருவாயை நோ்மையுடன் வசூல் செலுத்தி நாட்டை வளப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்றாா் அவா்.

இளம் அதிகாரிகளுக்கு கௌரவம்: ஃபரீதாபாதில் உள்ள நாசின் அகாதெமியில் 24 பெண் அதிகாரிகள் உள்பட 101 அதிகாரிகள் பயிற்சியை நிறைவு செய்துள்ளனா். பயிற்சிக் காலத்தின்போது வெவ்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட 6 பயிற்சி அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்ட பயிற்சி அதிகாரி மிஷால் குயினி டி’ கோஸ்டாவுக்கு குடியரசுத் தலைவரின் தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com