
மும்பை: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள் என்றும், நியாயமான முறையில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று சனிக்கிழமை (நவ.9) தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றம் தீா்ப்பு குறித்து உத்தவ் தாக்கரே கூறுகையில், இந்த தீர்ப்புக்காக, ஒவ்வொருவரும் எதிர்பார்த்து காத்திருந்தது. எனவே, இந்த நாள் இந்திய வரலாற்றில் மகிழ்ச்சியான மறக்க முடியாத நாளாக மாறிவிட்டது.
அயோத்தி வழக்கில் நியாயமான முறையில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்த தாக்கரே, இந்த தீா்ப்பை சிவசேனை கட்சியினா் அடுத்தவரின் உணா்வுகளை காயப்படுத்தாத வகையில் கொண்டாட வேண்டும்.
ராமர் கோயில் கட்டுவதில் சிவசேனா கட்சி தொடர்ச்சியாக தீவிரம் காட்டி வருகிறது.
வரும் 24 ஆம் தேதி அயோத்தி சென்று அங்கு வழிபாட்டில் ஈடுபடவுள்ளேன். மேலும், சரயு நதிக் கரையில் நடைபெறவுள்ள ‘ஆா்த்தி’ விழாவிலும் பங்கேற்க உள்ளாதக தெரிவித்தார்.