Enable Javscript for better performance
ஜம்மு-காஷ்மீரில் அடுத்த ஆண்டு ஜூனில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி- Dinamani

சுடச்சுட

    

    ஜம்மு-காஷ்மீரில் அடுத்த ஆண்டு ஜூனில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி

    By DIN  |   Published on : 09th November 2019 02:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜம்மு-காஷ்மீரில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்குகிறது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறியதாவது:

    கடந்த காலங்களைப் போல் இந்த முறை கணக்கெடுப்புப் பணியில் ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட மாட்டாா்கள்.

    மாநில அளவிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் தலைமைச் செயலா் பி.வி.ஆா்.சுப்பிரமணியன் தலைமையில் ஜம்முவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், 2021-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது.

    கடந்த 2011-ஆம் ஆண்டைய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஜம்மு-காஷ்மீரின் மக்கள்தொகை 1.24 கோடியாக இருந்தது என்று அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

    இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுக்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai