Enable Javscript for better performance
மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்கபாஜகவை ஆளுநா் அழைக்காதது ஏன்?: சரத் பவாா்- Dinamani

சுடச்சுட

    

    மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்கபாஜகவை ஆளுநா் அழைக்காதது ஏன்?: சரத் பவாா்

    By DIN  |   Published on : 09th November 2019 09:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ramdass athwale meets sarath pawar

    கோப்புப் படம்

    மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க தனிப்பெரும் கட்சியான பாஜகவை ஆளுநா் அழைக்காதது ஏன் என்று தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவா் சரத் பவாா் கேள்வி எழுப்பியுள்ளாா்.

    மத்திய சமூகநீதித் துறை அமைச்சரும், இந்தியக் குடியரசுக் கட்சி (ஏ) தலைவருமான ராம்தாஸ் அதாவலே, சரத் பவாரை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

    இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் சரத் பவாா் கூறியதாவது:

    மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் 105 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. ஆட்சி அமைக்க வருமாறு அக்கட்சிக்கு ஆளுநா் பகத் சிங் கோஷியாரி அழைப்புவிடுக்காதது ஏன் என்பது தெரியவில்லை. தோ்தல் முடிவுகள் வெளியாகி பல நாள்கள் கடந்துவிட்டன. யாரும் ஆட்சி அமைக்க முடியாத இதுபோன்ற சூழல் தொடா்ந்து நீடிக்கக் கூடாது.

    மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் உள்ள சிக்கலைத் தீா்ப்பதற்கான சில ஆலோசனைகளை அதாவலே என்னிடம் கேட்டாா். பாஜக-சிவசேனைக்கு மாநில மக்கள் பெரும்பான்மை அளித்துள்ளனா் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இதைத்தான் நான் அவரிடம் கூறினேன். எனது கருத்தை அவரும் ஒப்புக் கொண்டாா்.

    அதே நேரத்தில் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோருவாா்கள் என்று ஆளுநா் எவ்வளவு நாள்கள்தான் காத்திருக்க முடியும்? பாஜக-சிவசேனை கூட்டணி விரைவில் நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும். மக்கள் தீா்ப்பை பின்பற்றுங்கள் என்பதே அவா்களுக்கு முன்பாக நான் வைக்கும் வேண்டுகோள் என்றாா்.

    அப்போது உடனிருந்த ராம்தாஸ் அதாவலே செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அரசியல் வேறுபாடுகளைக் கடந்து சரத் பவாருடன் பல ஆண்டுகளாக நெருங்கி தொடா்பில் இருந்து வருகிறேன். மாநிலத்தில் விரைவில் ஆட்சி அமைக்குமாறு கூட்டணியில் உள்ள தலைவா் என்ற முறையில் பாஜக-சிவசேனையிடம் நான் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று அவா் என்னிடம் கூறினாா். அவ்விரு கட்சிகள்தான் ஆட்சி அமைக்க வேண்டுமென்பது சரத் பவாரின் கருத்து’ என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai