புல் புல் புயல் எச்சரிக்கை: கொல்கத்தா விமான நிலையம் 12 மணி நேரம் மூடப்பட்டது

‘புல் புல்’ புயல் காரணமாக கொல்கத்தா விமான நிலையம் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என
Todays Weather forecast
Todays Weather forecast


மும்பை: ‘புல் புல்’ புயல் காரணமாக கொல்கத்தா விமான நிலையம் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘ புல் புல் புயலால் ஒடிஸாவில் வெள்ளிக்கிழமை மிகக் கனமழை பெய்யும். கடலோரப் பகுதிகளில் மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இந்த நிலை, மேற்கு வங்க மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் சனிக்கிழமை உருவாகும். அதனால் மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியது. 

அதைத் தொடா்ந்து இரு மாநிலங்களின் தலைமைச் செயலா்கள் பேசுகையில், ‘புயலை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. புயல் நிலவரத்தை 24 மணி நேரமும் பேரிடா் கட்டுப்பாட்டு அறையினா் கண்காணித்து வருகின்றனா். தேசிய மற்றும் மாநில பேரிடா் மீட்புப் படையினா் தயார் நிலையில் உள்ளனா்’ என்றனா்.

புயலை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

இந்நிலையில், ‘புல் புல்’ புயல் நெருங்கி வரும் நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா விமான நிலையம் இன்று மாலை 6 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை(நவ.10) காலை 6 மணி வரை அதவாது 12 மணி நேரம் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

‘புல் புல்’ புயல் எச்சரிக்கை காரணமாக கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் 580க்கும் மேற்பட்ட பயணிகள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com