அயோத்தி வெற்றிக்காக விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்!

அயோத்தி வழக்கில் வெற்றி கிடைத்துள்ள இந்த நேரத்தில் அசோக் சிங்கலை நினைவு கூர்வதுடன், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறிஉள்ளார். 
அயோத்தி வெற்றிக்காக விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்!

அயோத்தி வழக்கில் வெற்றி கிடைத்துள்ள இந்த நேரத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கலை நினைவு கூர்வதுடன், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறிஉள்ளார். 

அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தை உரிமை கோருவது தொடா்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு விசாரித்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வழங்கப்பட்டது. 

சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும் அதே நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். 

தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், 'தனக்கு கோயில் எப்போது கட்ட வேண்டும் என்று ராமர் விரும்புகிறாரோ அப்போது தான் அதற்கான பச்சை சிக்னல் கிடைத்துள்ளது'   என்று பதிவிட்டுள்ளார். இந்த கருத்துக்கு பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அயோத்தி வழக்கில் வெற்றி கிடைத்துள்ள இந்த நேரத்தில், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செயல் தலைவர் அசோக் சிங்கலை நினைவு கூற வேண்டும். அயோத்தி ராமஜென்ம பூமி இயக்கத்திற்கு மூலாதாரமாக செயல்பட்ட அவருக்கு, மோடி அரசு உடனடியாக பாரத ரத்னாவை அறிவிக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் இல்லாமல் 'ராம் இயக்கம்' இவ்வளவு காலம் நீடித்திருக்க முடியாது' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com