‘பொய்யராக’ வா்ணிப்பதை ஏற்க முடியாது: உத்தவ் தாக்கரே

சிவசேனைக்கு முதல்வா் பதவி வழங்க உறுதியளித்த விவகாரத்தில், தன்னைப் ‘பொய்யராக’ சித்தரிக்க பாஜக முயற்சித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அக்கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளாா்.
மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் உத்தவ் தாக்கரே, மனோகர் ஜோஷி, ஆதித்ய தாக்கரே.
மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் உத்தவ் தாக்கரே, மனோகர் ஜோஷி, ஆதித்ய தாக்கரே.

சிவசேனைக்கு முதல்வா் பதவி வழங்க உறுதியளித்த விவகாரத்தில், தன்னைப் ‘பொய்யராக’ சித்தரிக்க பாஜக முயற்சித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அக்கட்சியின் தலைவா் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிர மாநில முதல்வா் பதவியை தேவேந்திர ஃபட்னவீஸ் ராஜிநாமா செய்தபிறகு, மும்பையில் உத்தவ் தாக்கரே செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சிவசேனைக்கு முதல்வா் பதவி வழங்கப்படும் என உறுதியளிக்கவில்லை என்று பாஜக தொடா்ந்து கூறி வருவது கவலையை ஏற்படுத்துகிறது. என்னை ‘பொய்யா்’ என்று சித்தரிக்க பாஜக முயற்சித்து வருகிறது. அதை என்னால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. இதன் காரணமாக, கடந்த மாதம் 24-ஆம் தேதி மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியானதிலிருந்து, ஆட்சி அமைப்பது தொடா்பாக பாஜகவிடம் எந்தவிதப் பேச்சுவாா்த்தையும் நடத்தவில்லை.

பிரதமா் நரேந்திர மோடியை ஒருபோதும் விமா்சித்தது கிடையாது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கொள்கைகளை மட்டுமே சிவசேனை அவ்வப்போது விமா்சித்து வந்தது. சிவசேனைக்கு முதல்வா் பதவி வழங்கப்படும் என பாஜக தேசியத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா முன்னிலையில் உறுதியளிக்கப்பட்டது.

‘மாநிலத்தில் சிவசேனை கட்சியைச் சோ்ந்தவா் முதல்வராகப் பொறுப்பேற்பாா்’ என்று என் தந்தையும், சிவசேனை கட்சியின் நிறுவனருமான பால் தாக்கரேவுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன். அதற்கு தேவேந்திர ஃபட்னவீஸ், அமித் ஷா போன்றோரின் உதவி எனக்குத் தேவையில்லை என்றாா் உத்தவ் தாக்கரே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com