அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு எவ்வளவு காலம் ஆகும்?

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கொடுத்துள்ள வடிவமைப்பின்படி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடிக்க 5 ஆண்டுகள் வரை ஆகும் என்று தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது. 
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு எவ்வளவு காலம் ஆகும்?

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கொடுத்துள்ள வடிவமைப்பின்படி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடிக்க 5 ஆண்டுகள் வரை ஆகும் என்று கூறப்படுகிறது.

அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தை உரிமை கோருவது தொடா்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு விசாரித்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. 

சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும் அதே நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கில் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். பல நூறு ஆண்டுகளாக இருந்துவந்த பிரச்னை இந்தத் தீர்ப்பின் மூலமாக முடிவுக்கு வந்துள்ளது. 

இந்நிலையில் ராமர் கோவிலின் வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும் என ஏற்கனவே  விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு திட்டமிட்டுள்ளது. 1990ம் ஆண்டு காலம் முதலே இதற்கான வடிவமைப்பில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடிக்க 5 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் 250க்கும் மேற்பட்ட கட்டிடக்கலை நிபுணர்கள் இதில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. கோவில் கட்டுவதற்கு தேவையான 212 தூண்களில் 106 தூண்கள் ஏற்கனவே தயாராகி விட்டன. இனிமேல் தான் கோவில் கட்டும் பணி தொடரப்படும் என்பதால் கோவில் கட்டி முடிப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த அனுபாய் சோம்பூரா தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com