உத்தரகாண்ட் பாஜக எம்.பி பயணம் செய்த கார் விபத்து!

உத்தரகாண்ட் மாநிலம் கார்வால் தொகுதி பாஜக. எம்.பியாக திரத் சிங் ராவத், இன்று காலை சென்று கொண்டிருந்த கார் திடீர் விபத்துக்குள்ளானது. 
உத்தரகாண்ட் பாஜக எம்.பி பயணம் செய்த கார் விபத்து!

உத்தரகாண்ட் மாநிலம் கார்வால் தொகுதி பாஜக. எம்.பியாக திரத் சிங் ராவத், இன்று காலை காரில் சென்று கொண்டிருந்தார். ஹரித்வார் அருகே  பீம்கோடா பகுதிக்கு அருகே காலை 7 மணியளவில் கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கார் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், எம்.பி திரத் சிங் படுகாயமடைந்தார்.

இதையடுத்து, அங்கு இருந்தவர்கள், அவரை மீட்டு ஹரித்வாரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து, அடுத்த கட்ட சிகிச்சைக்காக அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பாஜக எம்.பி வந்த கார், எதிரே வந்த காரில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com