அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை

அயோத்தி வழக்கில் உண்மைக்கு மாறாக மத நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாக வைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதால் அதில் திருப்தி ஏற்படவில்லை என்று
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை

அயோத்தி வழக்கில் உண்மைக்கு மாறாக மத நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாக வைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதால் அதில் திருப்தி ஏற்படவில்லை என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அஸôதுதீன் ஒவைஸி தெரிவித்தார்.
இதுகுறித்து ஹைதராபாதில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: உச்சநீதிமன்றம்தான் நீதித் துறையில் இறுதி முடிவு எடுக்கும் வல்லமை கொண்டது. ஆனால், தவறான தீர்ப்பை வழங்காது என்று சொல்ல முடியாது' என்று முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.வர்மாவே கூறியிருக்கிறார். உண்மையைத் தாண்டி மக்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட தீர்ப்பைதான் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.
மசூதி கட்டுவதற்கு அயோத்தியில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது. முஸ்லிம் தரப்பு அதை நிராகரிக்க வேண்டும். யாருடைய காணிக்கையும் எங்களுக்கு வேண்டாம். ஹைதராபாதில் சாலையில் யாசகம் செய்தால், கிடைக்கும் பணத்தைக் கொண்டு உத்தரப் பிரதேசத்தில் 5 ஏக்கர் நிலம் வாங்குவேன்.
அயோத்தியில் 500 ஆண்டுகளாக மசூதி இருந்தது. 1992}ஆம் ஆண்டு டிசம்பர் 6}ஆம் தேதி சங்க பரிவார் மற்றும் காங்கிரஸ் சதியால் மசூதி பலி கொடுக்கப்பட்டது. தற்போது உச்சநீதிமன்றத்தையும் தவறாக வழிநடத்திவிட்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்பு எனக்கு தனிப்பட்ட முறையில் திருப்தி அளிக்கவில்லை. எனது கருத்தை கூறுவதற்கு உரிமை உள்ளது. இதை கூறுவதால் நான் நீதிமன்றத்தை அவமதித்துவிட்டதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் முடிவுக்கு இணங்குவேன் என்றார் ஒவைஸி.

நக்வி பதிலடி

நாட்டின் நீதித் துறை மீது நம்பிக்கை வைக்காமல்,  தலிபான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களின் மனநிலையுடன் சிலர் உள்ளனர் என்று மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார். ஒவைஸியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், "தலிபான் மனநிலையுடன் இருப்பவர்களுக்கு நாட்டின் நீதித் துறை மீது நம்பிக்கை இருக்காது. அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றை சீர்குலைக்க யாரையும் இந்த நாடு அனுமதிக்காது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டை ஒற்றுமையுடன் திகழச் செய்வது நமது அனைவரின் கடமையாகும். அயோத்தி வழக்கின் தீர்ப்பு நாட்டில் எந்த இடத்திலும் ஒரு சாரரின் வெற்றியாகவும், மற்றொரு சாரரின் தோல்வியாகவும் கருதப்படவில்லை' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com