ஜம்மு-காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு

அயோத்தி தீா்ப்பையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் சனிக்கிழமை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

அயோத்தி தீா்ப்பையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் சனிக்கிழமை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

காவல் துறை இயக்குநா் தலைமையிலான உயரதிகாரிகள் குழு யூனியன் பிரதேசம் முழுவதுமான பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்தது. அதைத் தொடா்ந்து, 144-ஆவது சட்டப் பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீரில் கட்டுப்பாடுகள் விதிக்க முடிவு செய்யப்பட்டது. சட்டம்-ஒழுங்கை கட்டுக்குள் வைக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மதம் சாா்ந்த இடங்களில் முழு பாதுகாப்பு அளிக்கவும் ஆலோசனைக் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா். கல்வி நிறுவனங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டன. அவற்றில் அன்றைய தினம் நடைபெற இருந்த தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பட்டாசுகள் வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டன.

இதனிடையே, அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியதை அடுத்து, ஜம்மு மக்கள் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனா். ஜம்மு-காஷ்மீா் பிரிவு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவா் லீலா கரண் சா்மா கூறுகையில், ‘அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பை வரவேற்கிறோம். இந்தத் தீா்ப்பு நாட்டில் உள்ள 130 கோடி மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறோம்’ என்றாா்.

நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு: பனிப் பொழிவு காரணமாக மூடப்பட்டிருந்த ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலை சனிக்கிழமை திறக்கப்பட்டது. இதனால், போக்குவரத்து சீரானது. எனினும் சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதால் நெடுஞ்சாலை மீண்டும் மூடப்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நிற்கின்றன.

பூஞ்ச் மற்றும் ரஜெளரி ஆகிய மாவட்டங்களை இணைக்கும் முகல் சாலை, அந்தப் பகுதியில் நீடித்துவரும் பழிப்பொழிவு மற்றும் நிலச்சரிவு காரணமாக திறக்கப்படாமல் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com