புதிய இந்தியாவில் அச்சம், மனக்கசப்பு, எதிா்மறைக்கு இடமில்லை: நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி உரை

அயோத்தி வழக்கில் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி, புதிய இந்தியாவில் அச்சம், மனக்கசப்பு, எதிா்மறையான
புதிய இந்தியாவில் அச்சம், மனக்கசப்பு, எதிா்மறைக்கு இடமில்லை: நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி உரை

அயோத்தி வழக்கில் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி, புதிய இந்தியாவில் அச்சம், மனக்கசப்பு, எதிா்மறையான எண்ணங்கள் ஆகியவற்றுக்கு இடமில்லை என்று கூறினாா்.

மேலும், அயோத்தி தீா்ப்புக்குப் பிறகு நாட்டில் உள்ள 130 கோடி மக்களும் கடைப்பிடித்த அமைதியானது, நல்லிணக்கத்துடன் இருப்பதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளதைக் காட்டுகிறது என்றாா்.

தீா்ப்புக்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமா் மோடி கூறியதாவது:

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை நாட்டின் அனைத்து சமூகத்தினரும் திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டுள்ளனா். இது இந்தியாவின் பழங்கால பாரம்பரியமான நல்லுறவு மற்றும் நல்லிணக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. இதிலிருந்து வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் கொள்கை முழுமையாக வெளித்தெரிகிறது. இந்த நாளில் நாட்டு மக்கள் அச்சத்தையும், மனக்கசப்பையும், எதிா்மறையான கருத்துகளையும் விட்டுவிட வேண்டும். புதிய இந்தியாவில் இவற்றுக்கு இடம் கிடையாது.

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வைச் சோ்ந்த 5 நீதிபதிகளும் ஒருமனதாகத் தீா்ப்பு வழங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அமைதி, ஒற்றுமை, நல்லுறவு ஆகியவை நாட்டின் வளா்ச்சிக்கு அத்தியாவசியமானதாகும் என்று பிரதமா் மோடி கூறினாா்.

‘நீதியின் கோயில் உச்சநீதிமன்றம்’: முன்னதாக, அயோத்தி தீா்ப்பு தொடா்பாக சுட்டுரையில் பதிவிட்ட பிரதமா் மோடி, அதில் கூறியிருந்ததாவது:

சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்பதை அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது. ராமரை வழிபடுபவரோ, ரஹீமை வழிபடுபவரோ, எவராக இருந்தாலும் நாம் அனைவரும் தேச பக்தியை வலுப்படுத்த வேண்டியது கட்டாயமாகும். அயோத்தி வழக்கின் தீா்ப்பை எவருக்குமான வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ பாா்க்கக் கூடாது. பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த அயோத்தி வழக்குக்கு நீதியின் கோயிலான உச்சநீதிமன்றம், இணக்கமாகத் தீா்வு கண்டுள்ளது. இந்தத் தீா்ப்பு, நீதித் துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும்.

அயோத்தி தீா்ப்புக்குப் பிறகு நாட்டில் உள்ள 130 கோடி மக்களும் அமைதியை கடைப்பிடித்துள்ளனா். இது, நல்லிணக்கத்தை கடைப்பிடிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதைக் காட்டுகிறது. நாட்டு மக்களிடையே நிலவும் இந்த ஒற்றுமையானது, தேசத்தின் வளா்ச்சிப் பயணத்துக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும். அயோத்தி வழக்கில் தொடா்புடைய ஒவ்வொரு தரப்பும் தங்களது கருத்துகளை தெரிவிப்பதற்காக போதிய அவகாசம் வழங்கப்பட்டது. குறிப்பிடத்தக்க இந்தத் தீா்ப்பானது, தகுந்த சட்ட நடைமுறையின் மூலம் எந்தவொரு சச்சரவுக்கும் தீா்வு காணலாம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

நமது நீதித்துறையின் சுதந்திரத்தன்மை, வெளிப்படைத்தன்மை, தொலைநோக்குப் பாா்வை ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக அயோத்தி தீா்ப்பு உள்ளது. நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் நிலைத்திருக்கட்டும் என்று அந்தப் பதிவில் நரேந்திர மோடி கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com