ஆட்சியமைக்க சிவசேனைக்கு அழைப்பு வந்த நேரம்: மருத்துவமனையில் மூத்த எம்.பி அனுமதி!

மஹாரஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனைக்கு அழைப்பு வந்திருக்கும் நேரத்தில், அக்கட்சியின் மூத்த எம்.பி இருதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார்.
சஞ்சய் ரௌத்
சஞ்சய் ரௌத்

மும்பை: மஹாரஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனைக்கு அழைப்பு வந்திருக்கும் நேரத்தில், அக்கட்சியின் மூத்த எம்.பி இருதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார்.

288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனை 56 இடங்களிலும் வெற்றிபெற்றது. ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை அக்கூட்டணி பெற்றிருந்தும், முதல்வா் பதவியை தங்களுக்கும் இரண்டரை ஆண்டுகள் அளிக்க வேண்டும் என்று சிவசேனை கூறியதால், அங்கு ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. இதனிடையே, முதல்வர் ஃபட்னாவீஸ் ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநா், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை காபந்து முதல்வராக பதவி வகிக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியானது.

பின்னர் அதிக இடங்களை வென்ற கட்சி பாஜக என்பதால் ஆட்சியமைக்க வருமாறு பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னாவீஸ்க்கு ஆளுநர் பகத் சிங் கோஷியார் சனிக்கிழமையன்று அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப் போவதில்லை என்று மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் ஞாயிறு மாலை அறிவிப்பினை வெளியிட்டார்.

அதையடுத்து மஹாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வருமாறு சிவசேனை கட்சிக்கு மாநில ஆளுநர் கோஷ்யாரி தரப்பில் இருந்து ஞாயிறு மாலை அழைப்பு விடுக்கப்பட்டது. 56 இடங்களில் வெற்றி பெற்றுள்ள இரண்டாவது பெரிய கட்சி என்ற அடிப்படையில் சிவசேனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இதுதொடர்பாக திங்கள் மாலைக்குள் தங்களது நிலையை தெரியப்படுத்த வேண்டும் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஆட்சியமைக்க சிவசேனைக்கு அழைப்பு வந்திருக்கும் நேரத்தில், அக்கட்சியின் மூத்த எம்.பி இருதயக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார்.      

அக்கட்சியின் மூத்த எம்.பியும் பாஜகவுடன் தீவிர மோதல் போக்கு கொண்டவருமான சஞ்சய் ரௌத், இருதயத்தில் ஏற்பட்ட சிரமத்தின் காரணமாக திங்கள் மதியம் மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்திய அந்த மருத்துவமனையின் இருதய சிகிச்சை நிபுணரான ஜலீல் பார்க்கர், மேற்கொண்டு தகவல்களைத் தெரியப்படுத்த மறுத்துவிட்டார்.

அதேசமயம் பெயர் வெளியிட விரும்பாத சிவசேனா கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், 'இது வழக்கமான மருத்துவ சோதனைதான்; ஆனால் ஆஞ்சியோகிராம் சோதனை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com