யாருடைய ராஜிநாமா குறித்தும் நான் யாருடனும் ஆலோசிக்கவில்லை: ஷரத் பவார்

மகாராஷ்டிரத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெறுகிறது. 
யாருடைய ராஜிநாமா குறித்தும் நான் யாருடனும் ஆலோசிக்கவில்லை: ஷரத் பவார்

மகாராஷ்டிரத்தில் பெரும்பான்மை இல்லாததால் பாஜக ஆட்சி அமைக்க மறுத்துவிட்டது. இதையடுத்து ஆட்சி அமைக்குமாறு சிவசேனை கட்சிக்கு மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி அழைப்பு விடுத்தார். 

சிவசேனைக்கு ஆதரவு அளிப்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) ஆலோசிக்க வேண்டுமென்றால், முதலில் அக்கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலக வேண்டுமென்று என்சிபி செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியுள்ளார்.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெறுகிறது. இதில் ஃப்ரஃபுல் படேல், சுப்ரியா சூலே, அஜித் பவார், ஜயன்த் பாடில் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதுதொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார் கூறுகையில்,

நான் யாருடைய ராஜிநாமா குறித்தும் யாருடனும் எதுவும் ஆலோசிக்கவில்லை. கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் உடன் மகாராஷ்டிர அரசியல் சூழ்நிலை தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளோம். இதன் பின்னர் தான் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

இதனிடையே, மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜிநாமா செய்வதாக சிவசேனை எம்.பி. அரவிந்த் சாவந்த் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com