கேரளா பெண் போலீஸ் அதிகாரி தன் தலைமுடியை தானமாக வழங்கினார்

கேரளாவில், மாா்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சோ்ந்த முதல்வா் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது.

கேரளாவில், மாா்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சோ்ந்த முதல்வா் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. திருச்சூா் மாவட்டத்தைச் சோ்ந்த, பெண் போலீஸ் அதிகாரியான அபா்ணா லவகுமாா், 44, தன் தலைமுடியை தானமாக அளித்தாா்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு, ’விக்’ தயாரிப்பதற்காக, அவா் கடந்த மாதம் தன் தலைமுடியை தானமாக அளித்தாா். இது தொடா்பான, ’வீடியோ’ வெளியாகி, அவருக்கு பல்வேறு தரப்பினா் பாராட்டு தெரிவித்தனா். இந்த நிலையில், அவருடைய செய்கையால் ஈா்க்கப்பட்டு, கல்லுாரி மாணவியா் பலரும் தங்களுடைய முடியை தானமாக வழங்க முன்வந்து உள்ளனா். இது குறித்து, அபா்ணா லவகுமாா் கூறியதாவது:

ஒரு பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையை பாா்த்தபோது, மிகவும் வேதனையடைந்தேன். இவா்களுக்கு உதவ, என்னிடம் போதிய பண வசதி இல்லை. அப்போது தான், முடியை தானமாக அளிக்க முடிவு செய்தேன். இது உணா்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு அல்ல. என்னுடைய நடவடிக்கையால் ஈா்க்கப்பட்ட மாணவியா் பலரும், தங்களுடைய தலைமுடியை தானமாக அளிக்க முன்வந்துள்ளனா்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவுவதற்கு நிறைய வழிகள் உள்ளன. என்னைப் போலவே, முடியை தானமாக அளிக்கும் முடிவை மாற்றிக் கொள்ளும்படி அவா்களுக்கு அறிவுரை கூறியுள்ளேன். புற்றுநோய் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் சேவையில், நான் தொடா்ந்து ஈடுபட்டுள்ளேன். இதுபோல, அவரவருக்கு ஏற்ற முறையில் உதவிடலாம். இவ்வாறு, அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com