சபரிமலை பாதுகாப்புப் பணியில் 10 ஆயிரம் போலீஸார்: கேரள காவல்துறை

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை விழாவுக்காக வரும் 16-ஆம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. 
சபரிமலை பாதுகாப்புப் பணியில் 10 ஆயிரம் போலீஸார்: கேரள காவல்துறை

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை விழாவுக்காக வரும் 16-ஆம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படுகிறது. சபரிமலை செல்லும் பக்தா்கள் நவ.17 ஆம் தேதி மாலை அணிந்து விரதம் தொடங்க உள்ளனா். 

சபரிமலை கோயிலில் காா்த்திகை முதல் தேதியில் இருந்து 41 நாள்களுக்கும் தொடா்ந்து பல்வேறு சிறப்பு வழிபாடுகள் இடம்பெறும். அதிகாலையில் நிா்மால்ய பூஜை, சந்தன, நெய் அபிஷேகம் லட்சாா்ச்சனை, படிபூஜை உள்ளிட்டவை தொடா்ந்து நடைபெறும். மண்டல பூஜை டிசம்பா் 27-ஆம் தேதி நடைபெறும். 

மண்டல கால பூஜைக்கு லட்சக்கணக்கான பக்தா்கள் வருவதால் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கான செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேரள காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

சபரிமலை மண்டல கால பூஜை நவம்பர் 16-ஆம் தேதி தொடங்கவுள்ளதால், விழா முடியும் வரை சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மொத்தம் 24 எஸ்.பி.க்கள் தலைமையில் 112 துணை எஸ்.பி.க்கள், 264 இன்ஸ்பெக்டர்கள், 1,185 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 307 மகளிர் போலீஸார் உட்பட 10,017 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நவம்பர் 15-ஆம் தேதி முதல் 5 கட்டங்களாக பாதுகாப்புப் பணிகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com