இன்றைய முக்கியச் செய்திகளின் பட்டியல்! 10 மணி நிலவரம்!!

இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு இது.
Todays Breaking News
Todays Breaking News



இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு இது

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் "விசுவாசமாகப்" பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு பணிமாற்றமா? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

நெருங்கி வரும் உள்ளாட்சித் தேர்தல்: மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளரை மாற்றியுள்ள தமிழக அரசு!

உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளரை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மூன்று மாவட்ட ஆட்சியர்கள் இடமாற்றம்: தமிழக அரசு உத்தரவு

விழுப்புரம், தஞ்சை, விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களின் ஆட்சியர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, ரஃபேல் ஊழலை விசாரிப்பதற்கான மிகப் பெரிய கதவை திறந்துள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கு அந்த மாநில ஷியா மத்திய வக்ஃபு வாரிய தலைவா் வாசிம் ரிஸ்வி ரூ. 51 ஆயிரம் நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளாா்.

கேரளாவைச் சேர்ந்த சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், சிறுபான்மையினருக்கு எதிராக கொடுமைகள் தொடர்வதை இந்த உலகிற்கு மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியுள்ளது.

கைக்குட்டையில் திருமண அழைப்பிதழ்: காஞ்சிபுரம் துணை ஆட்சியரின் புதிய யோசனை..! சபாஷ்!! 

நெகிழிக்கு மாற்றாக துணிப் பைகளை வலியுறுத்தும் அதே நேரத்தில் திருமண அழைப்பிதழையே கைக்குட்டையில் அச்சடித்து அசத்தியிருக்கிறார் காஞ்சிபுரம் துணை ஆட்சியர் செல்வமதி வெங்கடேஷ்.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மோடியை விமரிசித்த ராகுலை எச்சரித்து, அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு

ரஃபேல் போர் விமான ஒப்பந்த வழக்கில், பிரதமர் மோடியை விமரிசித்ததாக ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.

ஐஐடியில்  எம்ஏ படித்து வந்த மாணவி பாத்திமா லத்தீஃப் தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணை காவல்துறையிடம் இருந்து மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார்.

சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, வழக்கில் தீர்ப்பளிக்காமல், உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதி கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்து பரிந்துரைத்துள்ளது.

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெறவில்லை என்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com