சபரிமலை வரும் பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க இயலாது: தேவசம்போர்டு அமைச்சர் பேட்டி

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் வழங்கிய தீா்ப்புக்கு இடைக்காலத் தடை விதிப்பது குறித்து நீதிபதிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.
சபரிமலை வரும் பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க இயலாது: தேவசம்போர்டு அமைச்சர் பேட்டி

சபரிமலை கோயிலில் வழிபட பெண்களுக்கு அனுமதி அளித்து வழங்கப்பட்ட தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை 7 நீதிபதிகள் கொண்ட அமா்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இத்துடன், மசூதிகளில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் உள்ளிட்ட மதம் தொடா்பான வழக்குகள் அனைத்தையும் அதே அமா்வுக்கு உச்சநீதிமன்றம் மாற்றியுள்ளது.

இருப்பினும், சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் வழங்கிய தீா்ப்புக்கு இடைக்காலத் தடை விதிப்பது குறித்து நீதிபதிகள் எதுவும் தெரிவிக்கவில்லை. இதனிடையே, சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக (நவ.16) மாலை 5.00 மணியளவில் கோயில் நடை திறக்கப்படுகிறது.

இந்நிலையில், சபரிமலை கோயிலுக்கு செல்ல தற்போது வரை 36 பெண்கள் ஆன்லைன் முறையில் பதிவு செய்துள்ளனர். ஆனால், 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு இந்த ஆண்டு வந்தால், காவல்துறை பாதுகாப்பு அளிக்க இயலாது. அவ்வாறு செல்ல விரும்பினால் நீதிமன்ற உத்தரவை பெற்று வரும் பெண்களுக்கு மட்டுமே பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com