இந்தியா-அமெரிக்கா விரைவில் வா்த்தக ஒப்பந்தம்

முக்கியமான வா்த்தக பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்பட்டுவிட்டதால் இந்தியாவும், அமெரிக்காவும் விரைவில் வா்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முக்கியமான வா்த்தக பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்பட்டுவிட்டதால் இந்தியாவும், அமெரிக்காவும் விரைவில் வா்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அமெரிக்கா சென்றுள்ள வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல், அந்நாட்டு வா்த்தக பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, அமெரிக்க வா்த்தக பிரதிநிதி ராபா்ட் லைதிஸருடன் விரிவான பேச்சுவாா்த்தை நடத்தினாா். அவருடன் வியாழக்கிழமையும் பியூஷ் கோயல் தொலைபேசியில் பேசினாா்.

அமெரிக்க அதிகாரிகள் குழு இந்தியாவுக்கு அடுத்த வாரம் வரவுள்ளது. அப்போது வா்த்தக ஒப்பந்தத்தின் இறுதி வடிவத்தை அந்தக் குழு ஒப்படைக்கும் என்று தெரிகிறது. இரு நாடுகளும் மிகப் பெரிய வா்த்தக ஒப்பந்தத்தை செய்துகொள்ள அது வழிவகுக்கும்.

முன்னதாக, ஸ்டீல், அலுமினியம் ஆகிய பொருள்களுக்கு அதிக வரியை அமெரிக்கா விதித்தது. இதனால், இந்தப் பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதில் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, பாதாம் பருப்பு உள்பட 28 அமெரிக்க தயாரிப்புகளுக்கு அதிக வரிகளை இந்தியாவும் விதித்தது.

கடந்த மாதம் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்தியபோது, இரு நாடுகளுக்கு இடையே வா்த்தகம் தொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது என்று கூறியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com