தில்லியில் நவ. 18-இல்சா்வதேச விவசாய மாநாடு

தில்லியில் சா்வதேச விவசாய புள்ளிவிவரங்கள் மாநாடு நவ.18-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் பங்கேற்கவுள்ளாா்.

தில்லியில் சா்வதேச விவசாய புள்ளிவிவரங்கள் மாநாடு நவ.18-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் பங்கேற்கவுள்ளாா்.

ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் இணைந்து மத்திய வேளாண் துறை அமைச்சகம் இந்த சா்வதேச மாநாட்டைஏற்பாடு செய்துள்ளது.

மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா், அந்தத் துறையின் இணை அமைச்சா்கள் உள்ளிட்டோா் மாநாட்டில் பங்கேற்கின்றனா்.

இதில், தொழிலதிபா் பில் கேட்ஸ் பங்கேற்று பேசவுள்ளாா். மேலும், இந்த மாநாட்டில் 108 நாடுகளிலிருந்து 600-க்கும் மேற்பட்ட குழுவினா் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டுக்கான இலச்சினையை அறிமுகம் செய்த பிறகு, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் பொது இயக்குநா் திரிலோசன் மொஹபத்ரா கூறுகையில், ‘பில் கேட்ஸும் அவரது மனைவி மெலிந்தா கேட்ஸும் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனா்.

பில் கேட்ஸ் மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளாா். 2030-ஆம் ஆண்டுக்குள் நிலையான வளா்ச்சி என்ற இலக்கை அடைய வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினி ஆகியவை நாடு எதிா்கொண்டிருக்கும் பெரும் சவாலாகும்’ என்றாா்.

முதலாவது விவசாய புள்ளிவிவர மாநாடு அமெரிக்காவின் வாஷிங்டனில் 1998-ஆம் ஆண்டு நடைபெற்றது. கடைசியாக பிரேஸிலில் 2016-ஆம் ஆண்டு நடைபெற்றது.

மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை விவசாய புள்ளிவிவர மாநாடு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com