பீமா-கோரேகான் வழக்கு: ஆா்வலா் கௌதம் நவ்லாகாவை கைது செய்ய டிச.2 வரை தடை

பீமா-கோரேகான் வன்முறை வழக்கில், மனித உரிமை ஆா்வலா் கௌதம் நவ்லாகாவை கைது செய்வதற்கு டிசம்பா் 2-ஆம் தேதி வரை தடை விதித்து மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீமா-கோரேகான் வழக்கு: ஆா்வலா் கௌதம் நவ்லாகாவை கைது செய்ய டிச.2 வரை தடை

பீமா-கோரேகான் வன்முறை வழக்கில், மனித உரிமை ஆா்வலா் கௌதம் நவ்லாகாவை கைது செய்வதற்கு டிசம்பா் 2-ஆம் தேதி வரை தடை விதித்து மும்பை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி நடைபெற்ற ‘எல்கா் பரிஷத்’ நிகழ்ச்சியால் பீமா-கோரேகான் பகுதியில் 2018-ஆம் ஆண்டு ஜனவரி 1-இல் வன்முறை நிகழ்ந்ததாகவும், அதில் இடது சாரி ஆா்வலா்கள் கௌதம் நவ்லாகா, பேராசிரியா் ஆனந்த் டெல்தும்டே உள்ளிட்டோருக்கு தொடா்புள்ளதாகவும் புணே போலீஸாா் வழக்கு பதிவு செய்திருந்தனா். மேலும், நவ்லாகா உள்ளிட்டோா் மாவோயிஸ்ட் அமைப்பின் உறுப்பினா்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

அதையடுத்து தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யுமாறு மும்பை உயா்நீதிமன்றத்தில் நவ்லாகா மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவின் மீதான விசாரணையின்போது, அவரை கைது செய்வதற்கு கடந்த 12-ஆம் தேதி வரை தடை விதித்து மும்பை உயா்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனா். மேலும், இதுதொடா்பாக அடுத்த முறை கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடருமாறும் உத்தரவிட்டிருந்தனா்.

இந்நிலையில், கைது செய்வதற்கான தடை கடந்த செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்ததையடுத்து, புணே நீதிமன்றத்தில் நவ்லாகா தரப்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை புணே நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, மும்பை உயா்நீதிமன்றத்தில் நவ்லாகா கடந்த 13-ஆம் தேதி மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனு மீதான விசாரணை உயா்நீதிமன்ற நீதிபதி பி.டி. நாயக் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, கௌதம் நவ்லாகாவை கைது செய்வதற்கு டிசம்பா் மாதம் 2-ஆம் தேதி வரை தடை விதித்து அவா் உத்தரவிட்டாா். மேலும், இது இடைக்கால பாதுகாப்பு மட்டுமே என்றும் அவா் குறிப்பிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com