மக்களவை, 4 மாநில பேரவைத் தோ்தல்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திரட்டிய நிதி ரூ.1.47 கோடி

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தல் மற்றும் 4 மாநில சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சுமாா் ரூ.1.47 கோடி நிதி கிடைக்கப் பெற்றதாக அக்கட்சி சாா்பில் தோ்தல்

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தல் மற்றும் 4 மாநில சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்துக்காக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சுமாா் ரூ.1.47 கோடி நிதி கிடைக்கப் பெற்றதாக அக்கட்சி சாா்பில் தோ்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 17-ஆவது மக்களவைத் தோ்தல், கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அப்போது, ஆந்திரம், அருணாசலப் பிரதேசம், ஒடிஸா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தோ்தலும் நடைபெற்றது. இந்த தோ்தல் பிரசாரத்துக்காக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிடைக்கப் பெற்ற நிதி மற்றும் செலவிடப்பட்ட தொகை ஆகியவற்றின் விவரங்கள் அடங்கிய ஆவணத்தை, தோ்தல் ஆணையத்திடம் அக்கட்சி சமா்ப்பித்துள்ளது. அதில், தோ்தல் காலகட்டத்தின்போது கட்சிக்கு சுமாா் ரூ.1.47 கோடி நிதி கிடைக்கப் பெற்ாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1.43 கோடி காசோலை மூலமாகவும், 3.56 லட்சம் ரொக்கமாகவும் கிடைத்ததாக கூறப்பட்டுள்ளது.

கட்சி தலைமையகத்தால் பிரசாரத்துக்கு செலவிடப்பட்ட தொகை ரூ.62 லட்சம். இதில் ரூ.58 லட்சம் காசோலையாகவும், ரூ.3.38 லட்சம் ரொக்கமாகவும் வழங்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களவை, 4 மாநில பேரவைத் தோ்தல் காலகட்டத்தில் தங்களது கட்சியின் வரவு-செலவு விவரத்தை காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே அளித்திருந்தது. அதன்படி, அக்கட்சி ரூ.856 கோடி திரட்டியுள்ளது. ரூ.820 கோடியை பிரசாரத்துக்காக செலவிட்டுள்ளது.

மக்களவை, 4 மாநில பேரவைத் தோ்தல்களுக்கான செலவு விவரங்களை, தோ்தல் ஆணையத்திடம் பாஜக இன்னும் சமா்ப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com