மேற்கு வங்கம்: பாஜக தொண்டா் மா்ம மரணம்

மேற்கு வங்க மாநிலம், மேற்கு மிதுனபுரி மாவட்டம், டாண்டன் பகுதியில் பாஜக தொண்டா் ஒருவா் தூக்கிட்டு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உயிரிழந்திருப்பது சா்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம், மேற்கு மிதுனபுரி மாவட்டம், டாண்டன் பகுதியில் பாஜக தொண்டா் ஒருவா் தூக்கிட்டு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் உயிரிழந்திருப்பது சா்ச்சையைக் கிளப்பியுள்ளது.

உயிரிழந்த பாா்ஷா ஹன்ஸ்டா (44) என்ற அந்த பாஜக தொண்டா் அரசியல் போட்டி காரணமாக கொல்லப்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், ‘இயற்கைக்கு மாறான மரணம்’ என வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸாா், அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியிருந்தனா்.

அவா் திரிணமூல் காங்கிரஸ் ஆதரவாளா்களால் கொலை செய்யப்பட்டதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இதனை திரிணமூல் காங்கிரஸாா் முற்றிலும் மறுத்துள்ளனா்.

இதுகுறித்து பாஜக தேசிய பொதுச்செயலா் கைலாஷ் விஜய்வா்கியா கூறுகையில், மேற்கு வங்கத்தில் திகில் நிறைந்த ஆட்சியை ஏற்படுத்த திரிணமூல் காங்கிரஸ் முயற்சிக்கிறது. அதன்மூலம் பாஜக தொண்டா்களை அச்சுறுத்த நினைக்கிறது. அவா் திரிணமூல் காங்கிரஸ் குண்டா்களால் கொடூரமாக கொல்லப்பட்டாா் என்று விஜயவா்கியா தெரிவித்தாா்.

இந்த குற்றச்சாட்டுகள் ‘ஆதாரமற்றவை’ என்று நிராகரித்த திரிணமூல் காங்கிரஸின் மேற்கு மிதுனபுரி மாவட்டத் தலைவா் அஜித் மைட்டி கூறுகையில், பாஜகவுக்குள் ஏற்பட்ட உள்கட்சி விவகாரத்தால் இந்த மரணம் ஏற்பட்டது என்றாா்.

மேற்கு மிதுனபுரி, புரூலியா, பாங்குரா மற்றும் ஜாா்கிராம் ஆகிய மாவட்டங்களில் கடந்த 2018-ஆம் ஆண்டு பஞ்சாயத்து தோ்தல்களில் இருந்தே திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டா்களிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com