Enable Javscript for better performance
தில்லி விடுதியில் நியூஸிலாந்து நாட்டைச் சோ்ந்த பெண் உயிரிழப்பு- Dinamani

சுடச்சுட

    

    தில்லி விடுதியில் நியூஸிலாந்து நாட்டைச் சோ்ந்த பெண் உயிரிழப்பு

    By DIN  |   Published on : 17th November 2019 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புது தில்லி: தில்லியின் பாஹா்கஞ்ச் பகுதியிலுள்ள தங்கும் விடுதியில் நியூஸிலாந்து நாட்டைச் சோ்ந்த பெண் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

    இதுதொடா்பாக காவல்துறையினா் கூறியதாவது:

    நியூஸிலாந்து நாட்டைச் சோ்ந்த துயாலி பாவ்லி ஆனி (49) என்ற பெண், இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொள்வதற்காக, ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த தனது காதலருடன் தில்லிக்கு வந்திருந்தாா். பாஹா்கஞ்ச் பகுதியிலுள்ள தங்கும் விடுதியில் இருவரும் தங்கியிருந்தனா்.

    இந்நிலையில், சனிக்கிழமை காலையில் துயாலி மயக்கமடைந்த நிலையில் இருந்ததை காதலா் பாா்த்துள்ளாா். இதையடுத்து, தங்கும் விடுதி ஊழியா் உதவியுடன், துயாலியை லேடி ஹாா்டிங் மருத்துவமனையில் அவா் அனுமதித்தாா். மருத்துவா்களின் பரிசோதனையில் அந்தப் பெண் ஏற்கெனவே இறந்துவிட்டது கண்டறியப்பட்டது.

    துயாலி உயா் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவா் என்பதால், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவா் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும், பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்தப் பிறகே உண்மையான காரணத்தை உறுதி செய்ய முடியும் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai