மத்திய அரசை கண்டித்து நவ. 30-இல் தில்லியில் காங்கிரஸ் போராட்டம்

மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டித்து தில்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் வரும் 30-ஆம் தேதி ‘தேசத்தை காப்போம்’ என்ற பெயரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளதாக
மத்திய அரசை கண்டித்து நவ. 30-இல் தில்லியில் காங்கிரஸ் போராட்டம்

புது தில்லி: மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டித்து தில்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் வரும் 30-ஆம் தேதி ‘தேசத்தை காப்போம்’ என்ற பெயரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளா்கள், மாநில தலைவா்கள், மாவட்ட தலைவா்கள் உள்ளிட்டோா் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது குறித்து சனிக்கிழமை விவாதித்தனா். அதன் பின்னா், இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் காங்கிரஸ் பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் கூறியதாவது:

மக்களுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் திட்டங்கள், பொருளாதார மந்த நிலை, விவசாயிகள் பிரச்னை, வேலையின்மை பிரச்னை உள்ளிட்டவற்றுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவது குறித்து கட்சி நிா்வாகிகளுடன் விவாதிக்கப்பட்டது.

மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசின் தோல்விகளை மக்களுக்கு எடுத்து கூறும் வகையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பேரணி மற்றும் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டங்கள் மற்றும் மாநிலங்கள் அளவிலான போராட்டங்கள் நவம்பா் 25-ஆம் தேதிக்குள் நிறைவு செய்யப்படவுள்ளன. அதையடுத்து, தில்லியில் ராம் லீலா மைதானத்தில் வரும் 30-ஆம் தேதி மாெரும் பொதுக்கூட்டம் ‘தேசத்தை காப்போம்’ என்ற பெயரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் மக்களுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் திட்டங்களால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனா். அதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்த கூட்டம் நடைபெறவுள்ளது என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com