லட்சுமண ரேகையை யாரும் கடக்க வேண்டாம்: மேற்கு வங்க அரசுக்கு ஆளுநர் எச்சரிக்கை

லட்சுமண ரேகையை யாரும் கடந்து செல்ல முயற்சி செய்ய கூடாது என்று மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தாங்கர் அந்த மாநில அரசுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.
லட்சுமண ரேகையை யாரும் கடக்க வேண்டாம்: மேற்கு வங்க அரசுக்கு ஆளுநர் எச்சரிக்கை

கொல்கத்தா: லட்சுமண ரேகையை யாரும் கடந்து செல்ல முயற்சி செய்ய கூடாது என்று மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தாங்கர் அந்த மாநில அரசுக்கு மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.

ஜெகதீப் தாங்கரும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொல்கத்தாவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெகதீப் தாங்கர் பேசியபோது, "அரசமைப்புச் சட்டத்தின்படி ஆளுநராக எனது பணிகள் என்ன என்பதையும், என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதையும் அறிந்துள்ளேன். லட்சுமண ரேகையைக் கடக்க யாரும் முயற்சி செய்ய வேண்டாம்' என்றார்.

மேற்கு வங்க ஆளுநராக கடந்த ஜூலை மாதம் ஜெகதீப் தாங்கர் பதவியேற்றதிலிருந்து மம்தாவுக்கும், அவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு விவகாரங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன.

சமீபத்தில் இருவருக்கும் இடையே ஹெலிகாப்டர் விவகாரத்தில் வார்த்தை மோதல் ஏற்பட்டது. முர்ஷிதாபாதில் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு கொல்கத்தாவுக்கு திரும்புவதற்கு ஹெலிகாப்டர் வழங்குமாறு ஜெகதீப் தாங்கர் மேற்கு வங்க அரசிடம் கோரியிருந்தார்.

பொதுமக்களின் பணத்தை தவறாக பயன்படுத்த முடியாது என்று கூறி மேற்கு வங்க அரசு அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com