Enable Javscript for better performance
இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஏற்றுமதி கடந்த 2 ஆண்டுகளில் 6 மடங்கு அதிகரித்துள்ளது: ராஜ்நாத் சிங்- Dinamani

சுடச்சுட

    

    இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஏற்றுமதி கடந்த 2 ஆண்டுகளில் 6 மடங்கு அதிகரித்துள்ளது: ராஜ்நாத் சிங்

    By DIN  |   Published on : 18th November 2019 11:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Defence_Minister_Rajnath_Singh

     

    6-ஆவது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டம்-பிளஸ் (ஏடிஎம்எம்-பிளஸ்) பாங்காக்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஏடிஎம்எம்-பிளஸ் நாடுகளின் 17 பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில்,

    2024-ஆம் ஆண்டில் 5 மில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை முன்னெடுக்கம் விதமாக 'மேக் இன் இந்தியா' முயற்சியின் கீழ் பாதுகாப்புத் துறை ஒரு முக்கிய துறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆயுத இறக்குமதியில் இந்தியா 2-ஆவது மிகப்பெரிய நாடாக திகழ்கிறது. 2014-18 ஆண்டுகளுக்குள்ளாக 9.5 சதவீத ஆயுத இறக்குமதி நடைபெற்றுள்ளது. 

    இந்தியாவின் 2019-20 நிதியாண்டில் பாதுகாப்புக்கான ஒதுக்கீடு 60 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். ஏறக்குறைய 65% பாகங்கள், கூறுகள், இருக்கும் அமைப்புகளின் துணை அமைப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன, இந்தியா இப்போது அவற்றை தயாரிக்க முடியும் & தோராயமாக 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு பொருட்கள் உள்நாட்டு தனியார் துறைகளால் தயாரிக்கப்படுகின்றன.

    பாதுகாப்பு உற்பத்தி கொள்கை 2018 வரைவு-ன் படி 2025-ஆம் ஆண்டு 5 பில்லியன் அமெரிக்க டாலர் பாதுகாப்பு ஏற்றுமதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு லட்சியமாக இருந்தாலும், இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஏற்றுமதி கடந்த 2 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 6 மடங்கு அதிகரித்துள்ளது ஊக்கமளிக்கிறது.

    2025-ஆம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை தயாரிப்பு 26 பில்லியன் அமெரிக்க டாலரை அடைவதற்கு இந்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்று தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai