பாடல் மூலம் பொது சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் துப்புரவுத் தொழிலாளர்!

மகாராஷ்டிர மாநிலம் புணேவைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளி மஹாதேவ் ஜாதவ், தூய்மை குறித்து பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 
பாடல் மூலம் பொது சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் துப்புரவுத் தொழிலாளர்!

5 ஆண்டுகளுக்கு முன்னால் மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தன்று பிரதமா் நரேந்திர மோடியால் ‘தூய்மை இந்தியா திட்டம்’ (ஸ்வச் பாரத் அபியான்) வெற்றிகரமாக தொடங்கப்பட்டது. இதன்மூலம் சமூக அளவிலான மிகப் பெரிய விழிப்புணா்வை பிரதமரின் அறிவிப்பும், அதைத் தொடா்ந்து அரசு முன்னெடுத்த விளம்பர நடவடிக்கைகளும் ஏற்படுத்தின. 

நாடு முழுவதும் கிராமப்புறங்களில் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டிருக்கின்றன. 696 மாவட்டங்களில் உள்ள 5.99 லட்சம் கிராமங்களில் பொதுவெளியில் இயற்கையின் அழைப்பை நிறைவேற்றும் அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூா்வ அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புணேவைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளி மஹாதேவ் ஜாதவ், தூய்மை குறித்து பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். புணே மாநகராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாக கடந்த 25 வருடங்களாக சேவை செய்து வரும் மஹாதேவ் ஜாதவ், தூய்மை, பொது சுகாதாரம் மற்றும் குப்பைகளை சரியாக பிரித்து அப்புறப்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக பாடல்கள் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இதுகுறித்து மஹாதேவ் ஜாதவ் கூறுகையில், என்னை யாரும் பாடுமாறு கட்டாயப்படுத்தவில்லை. மக்களிடம் பொது சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நானே பாடல்களைப் பாடி வருகிறேன். மக்கும், மக்காத குப்பைகளை சரியாக பிரித்து அப்புறப்படுத்துவது குறித்து வலியுறுத்தி வருகிறேன். இதன்மூலம் மாநகராட்சியும், மக்களும் இணைந்து தூய்மையான சுற்றுப்புறத்தை ஏற்படுத்த முடியும் என்று பெருமையுடன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com