காஷ்மீர் தலைவர்கள் எங்கே? - மக்களவையில் குரல் எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பிக்கள்!

ஜம்மு காஷ்மீரில் சிறை வைக்கப்பட்ட காஷ்மீர் தலைவர்கள் எங்கே? என எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று மக்களவையில் கேள்வி எழுப்பினர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. 
காஷ்மீர் தலைவர்கள் எங்கே? - மக்களவையில் குரல் எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பிக்கள்!

ஜம்மு காஷ்மீரில் வீட்டுச் சிறை வைக்கப்பட்ட காஷ்மீர் தலைவர்கள் எங்கே? என எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று மக்களவையில் கேள்வி எழுப்பினர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. 

ஜம்மு காஷ்மீரில் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்ற மாநிலங்களவையில் அறிவித்தார். இதன் காரணமாக பாதுகாப்பு கருதி, காஷ்மீரில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. காஷ்மீர் தலைவர்கள் பலர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பான விவாதத்தின் போதே, காஷ்மீர் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அவைகளில் குரல் எழுப்பப்பட்டது. 

இந்த நிலையில், இன்று நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் காஷ்மீர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். காஷ்மீர் தலைவர்கள் எங்கே? என்று கேள்வி எழுப்பியதுடன், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட காஷ்மீர் தலைவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் இதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் முறையிட்டனர். மேலும், சபாநாயகர் இருக்கை அருகே வந்து 'நாட்டை பிளவுபடுத்துவதை நிறுத்துங்கள்' என கோஷங்களையும் எழுப்பினர்.

இதுதவிர, அப்துல்லாவை வீட்டுச் சிறையில் வைத்திருப்பது தொடர்பாக மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளது.

இதற்கிடையில், பூஜ்ய நேரத்தில் அனைத்து பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இருப்பதாகவும், கேள்வி நேரத்தை சரியாக பயன்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று  நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி வலியுறுத்தினார். 

இதையடுத்து அவையில் சற்று அமைதி நிலவியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com