சபரிமலை வசதிகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

சபரிமலை ஐயப்பன் கோயில் வருடாந்திர மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டதையடுத்து, கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாநில தேவஸ்வம் அமைச்சர்
சபரிமலை வசதிகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயில் வருடாந்திர மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டதையடுத்து, கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாநில தேவஸ்வம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

ஐயப்பன் கோயில் வருடாந்திர மண்டல பூஜைக்காக சனிக்கிழமை திறக்கப்பட்டது. கோயில் நடை இரண்டு மாதங்களுக்கு திறந்திருக்கும்.

இந்நிலையில், சபரிமலையில் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், நிலக்கல், பம்பை, சந்நிதானம் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு செய்துதரப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் சுரேந்திரன் கூறியதாவது:

பக்தர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகளில் சில குறைபாடுகள் உள்ளன. அவை ஓரிரு நாள்களில் சரி செய்யப்பட்டுவிடும். சபரிமலை கோயிலுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.100 கோடியில், ரூ.30 கோடியை மாநில அரசு விடுவித்துள்ளது. இதனால், இந்த ஆண்டு நிதி பற்றாக்குறை காரணமாக முன்னேற்பாடுகளில் சுணக்கம் ஏற்படாது என்று நம்புகிறேன்.

பம்பை வரை பக்தர்கள் வருவதற்கு சிறிய ரக வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. நிலக்கல்லில் இருந்து பம்பை வரை பக்தர்கள் செல்வதற்காக மாநில அரசின் பேருந்துகள் இயக்கப்படும் என்றார் அவர்.

கொட்டும் மழையிலும் தரிசனம்: நடை திறக்கப்பட்ட இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 5 மணி வரை 25,125 பக்தர்கள் வருகை தந்ததாக காவல் துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com