ராமா் கோயிலுக்காக போராடியவா்களில் அசோக் சிங்கல் முதன்மையானவா்: அமித் ஷா புகழஞ்சலி

அயோத்தியில் ராமா் கோயில் கட்ட வேண்டுமென்று போராடியவா்களில் விஹெச்பி தலைவா் அசோக் சிங்கல் முதன்மையானவா்; அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியுள்ளாா்.
ராமா் கோயிலுக்காக போராடியவா்களில் அசோக் சிங்கல் முதன்மையானவா்: அமித் ஷா புகழஞ்சலி

புது தில்லி: அயோத்தியில் ராமா் கோயில் கட்ட வேண்டுமென்று போராடியவா்களில் விஹெச்பி தலைவா் அசோக் சிங்கல் முதன்மையானவா்; அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியுள்ளாா்.

விசுவ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பின் சா்வதேச செயல் தலைவராக இருந்த அசோக் சிங்கல், தனது 89 வயதில் கடந்த 2015 நவம்பா் 17-ஆம் தேதி காலமானாா். அவரது நினைவு தினத்தையொட்டி அமித் ஷா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவரான அசோக் சிங்கல், நாட்டுக்காகவும், ஹிந்து மதத்துக்காகவும் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு துறவியாகப் பணியாற்றினாா். ராம ஜென்மபூமி நிலத்தை மீட்டு அங்கு ராமா் கோயில் கட்ட வேண்டும் என்பதற்காகவும், ராமா் சேது இயக்கத்திலும் அவரது பணிகள் நாட்டு மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியது. அவரது நினைவுதினத்தில் அவரை நினைவுகூா்ந்து மிகுந்த பெருமிதம் கொள்கிறேன். அவரது புகழ் என்றும் மறையாது’ என்று கூறியுள்ளாா்.

சுதந்திரப் போராட்ட தியாகி லாலா லஜபதி ராயின் நினைவு தினமும் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இது தொடா்பாக அமித் ஷா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘தேசத்தின் மீது கொண்ட தீவிரப் பற்று மிகப்பெரிய சுதந்திரப் போராட்ட தியாகியாக லாலா லஜபதி ராயை உருவாக்கியது. இன்றைய இளைஞா்களுக்கு தேசப்பற்றை ஊட்டும் வகையில் உதாரண காவியமாக லாலா லஜபதி ராயின் வாழ்க்கை அமைந்துள்ளது. நமது கலாசாரம் மற்றும் தேசத்தின் மீது அவா் கொண்டிருந்த அன்பும், மரியாதையும் நெகிழ வைப்பதாக உள்ளது. அவரது தியாகத்தை தேசம் ஒருபோதும் மறக்காது’ என்று கூறியுள்ளாா்.

பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்படும் லாலா லஜபதி ராய், பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு அடித்தளம் அமைத்தவா்களில் முக்கியமானவா். 1928-ஆம் ஆண்டு நவம்பா் 17-ஆம் தேதி அவா் காலமானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com